இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் Bluetooth earphones மற்றும் Headphones ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. ஆனால், “சத்தமா இசை கேட்பதால் காது கேள்வித் திறன் குறையும்” என்று எச்சரிக்கை விடுக்கிறார் ரேடியாலஜிஸ்ட் டாக்டர் முபாரக். குறிப்பாக, நீண்ட நேரம் அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதால், செவிப்பறை (eardrum) பாதிக்கப்பட்டு, நிரந்தர கேள்வித் திறன் இழப்பு ஏற்படலாம் என்கிறார்.
அதிக சத்தம் & காது சேதம்
Bluetooth headset, செவிப்பறை (eardrum) அருகே வைக்கப்படுவதால், இசையின் ஒலி 55 முதல் 100 decibels வரை உயர்ந்து விடுகிறது. இந்த அளவு சத்தம் நீண்ட நேரம் சென்றால், inner ear hair cells சேதமடைந்து, கேள்வித் திறன் நிரந்தரமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்
பலர் headphones போட்டு தொடர்ந்து மணி கணக்கில் பாடல் கேட்பது வழக்கமாகி விட்டது. இது ஆரம்பத்தில் சிறிய humming, ringing sound (tinnitus) போல தோன்றினாலும், காலப்போக்கில் கேள்வித் திறன் குறைபாடு ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Ear Phone: அழுக்கான இயர்ஃபோனை மற்றவர்களுக்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?
மருத்துவர் பரிந்துரைக்கும் பாதுகாப்பு வழிகள்
1. Over-the-ear headphones பயன்படுத்துங்கள்
செவிப்பறை அருகில் இருக்கும் in-ear Bluetooth மாற்றமாக, over-the-ear headphones பயன்படுத்தினால் decibel அளவு குறையும். இதனால் ear damage அபாயம் குறையும்.
2. 60-60 Rule பின்பற்றுங்கள்
60-60 Rule என்ற அடிப்படை நெறியை கடைபிடிக்க வேண்டும். சத்தத்தை 60% க்கும் குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு 60 நிமிடத்திற்கு, 10 நிமிட இடைவெளி எடுங்கள். இதனால், காதுகளுக்கு ஓய்வு கிடைத்து, கேள்வித் திறன் பாதுகாக்கப்படும்.
3. குழந்தைகள் அருகில் இருந்தால் கவனமாக இருங்கள்
வீட்டில் குழந்தைகள் இருந்தால், volume limit அல்லது time limit set செய்ய வேண்டும். அதிக சத்தம் சிசுவின் காதுகளுக்கு தீங்கு செய்யக்கூடும்.
4. Loudspeaker பயன்படுத்துவது சிறந்தது
Headphones-ஐ விட Loudspeaker பயன்படுத்தினால் காதுகள் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் காதுகளுக்கும் பிரச்சினை வராது, அருகில் இருப்பவர்களுக்கும் எந்தத் தீங்கு இல்லை.
View this post on Instagram
WHO எச்சரிக்கை
சமீபத்திய World Health Organization (WHO) ஆய்வில், உலகளவில் சுமார் 1 பில்லியன் இளைஞர்கள் கேள்வித் திறன் இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் headset மற்றும் அதிக சத்தமுள்ள இசை தான்.
மருத்துவர் எச்சரிக்கை
“Headphones-ஐ பயன்படுத்துவதில் தவறு இல்லை, ஆனால் நேரம் மற்றும் சத்த அளவை கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில், காது சேதம் நிரந்தரமாகி விடும் அபாயம் அதிகம்” என்று டாக்டர் முபாரக் எச்சரிக்கிறார்.
இறுதியாக..
Headphones, Earphones பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், அதிக சத்தம் + நீண்ட நேரம் பயன்படுத்தினால், செவிப்பறை பாதிப்புடன், நிரந்தர கேள்வித் திறன் இழப்பு ஏற்படும். எனவே, 60-60 Rule, Over-the-ear headphones, Volume control ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே பாதுகாப்பாக இசையை அனுபவிக்க முடியும்.