How To Use Ghee For Cracked Heels: குளிர்காலத்தில் பலரும் குதிகால் வெடிப்பு பிரச்சனையைச் சந்தித்து வருகிண்றனர். பல சமயங்களில் இந்த வெடிப்பு பிரச்சனை அதிகமாகி வலி, எரியும் உணர்வு மற்றும் இரத்தப் போக்கு பிரச்சனையை அதிகமாக்கலாம். பொதுவாக, குதிகால் வெடிப்பு பிரச்சனை அழுக்கு மற்றும் பாதங்களை சரியாக சுத்தம் செய்யாததால் ஏற்படும். குளிர்காலத்தில் சிலரது தோல் மிகவும் வறண்டு போகலாம். இதனால், குதிதால் வெடிப்பு ஏற்படும்.
இந்த வெடிப்புள்ள குதிகால்களை மறைக்க சாக்ஸ் அணிவதைப் பார்த்திருப்போம். ஆனால், அவர்கள் மறைக்கப்படாமல் சிகிச்சையளிக்க வேண்டும். குதிகால் வெடிப்புகளைக் குணப்படுத்த சந்தையில் கிடைக்கும் கிரீம்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், எவ்வளவு செய்தும், இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடவில்லை. குளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு சிறந்த ஆயுர்வேத சிகிச்சை முறை குறித்து, ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பவ்சர் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Aak Leaves For Body Pain: உடம்பு வலியை நீக்க உதவும் எருக்கஞ்செடி எண்ணெய்! எப்படி பயன்படுத்தலாம்?
குதிகால் வெடிப்புக்கான ஆயுர்வேத சிகிச்சை
டாக்டர் தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குதிகால் வெடிப்புக்கான ஆயுர்வேத சிகிச்சை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, குதிகால் வெடிப்புகளைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் Pad-Abhyanga முறை பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் பாதங்கள் என்பது பதா என அழைக்கப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, “பாதங்கள் நம் உடலில் அடித்தளம் ஆகும். இவை நம்மை தரையுடன் இணைக்கிறது. பாதங்களில் பல்வேறு அழுத்த புள்ளிகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மற்றும் நரம்பு மண்டலங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவையாகும். இந்த புள்ளிகளைத் தூண்டவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மசாஜ் செய்வது மிகவும் முக்கியமானதாகும்” என்று கூறியுள்ளார்.
குதிகால் வெடிப்புக்கு தேசி பசு நெய்
குதிகால் வெடிப்புகளைக் குணப்படுத்த பாரம்பரியமாக சுத்தமான தேசி பசு நெய் உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்காலத்தில் சருமத்தில் விரிசல் ஏற்பட்டால், 2 முதல் 3 வாரங்களுக்கு தூங்குவதற்கு முன் இந்த நெய் கொண்டு கால்கள் மற்றும் உள்ளங்கால்களை மசாஜ் செய்யலாம். இவ்வாறு தேசி நெய் கொண்டு குதிகால் பகுதியில் மசாஜ் செய்வதன் மூலம் விரிசல் மற்றும் எரிச்சலில் இருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Collagen Boosting Herbs: சருமத்தில் இயற்கையாகவே கொலாஜனை அதிகரிக்க இந்த மூலிகை போதும்.!
குதிகால் வெடிப்புக்கு நெய் பயன்படுத்தும் முறை
- முதலில் பாத்திரம் ஒன்றில் 2 ஸ்பூன் நெய்யைப் போட்டு குறைந்த தீயில் சூடாக்க வேண்டும்.
- நெய் சூடாக்கிய பின் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இப்போது நெய் மசாஜ் தயாராக உள்ளது.
- நெய் மற்றும் மஞ்சள் கலவையைக் கொண்டு பாதங்களை மசாஜ் செய்யலாம்.
- மசாஜ் செய்த பிறகு, இரவு முழுவதும் நெய்யை அப்படியே விட்டு விடவும். காலை எழுந்தவுடன், கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
- நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் இதைப் பயன்படுத்தினால், குதிகால் வெடிப்பு குறையும் மற்றும் சருமம் மென்மையாக மாறும்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Joint Pain: மூட்டு வலியால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த மூலிகைகளை யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik