Collagen Boosting Herbs: சருமத்தில் இயற்கையாகவே கொலாஜனை அதிகரிக்க இந்த மூலிகை போதும்.!

  • SHARE
  • FOLLOW
Collagen Boosting Herbs: சருமத்தில் இயற்கையாகவே கொலாஜனை அதிகரிக்க இந்த மூலிகை போதும்.!


Ayurvedic Herbs For Collagen: அன்றாட வாழ்க்கையில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் ஆயுர்வேத வைத்தியங்கள் உதவுகிறது. இதன் முக்கிய நன்மையாக இவை இயற்கையானதாக இருப்பதால் தீங்கு விளைவிக்காது. அந்த வகையில் சருமத்திற்கு கொலாஜனை அதிகரிக்க பல்வேறு இயற்கையான வைத்தியங்கள் உதவுகின்றன.

இந்த வைத்தியங்களின் உதவியுடன் இயற்கையாகவே கொலாஜனை அதிகரிக்க முடியும். இந்த மூலிகைகள் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தீர்த்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்த வேண்டிய மூலிகைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair Growth: முடி கொட்டாம அடர்த்தியா வளர செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்க போதும்

இயற்கையாகவே கொலாஜன் அதிகரிக்க உதவும் மூலிகைகள்

சருமத்தில் இயற்கையான முறையில் கொலாஜனை அதிகரிக்க சில ஆயுர்வேத மூலிகைகள் உதவுகின்றன. அதில் சிலவற்றை இதில் காண்போம்.

மஞ்சள்

சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் மஞ்சள் பெரிதும் உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்க உதவுகிறது. கொலாஜனை அதிகரிக்கும் திசுக்களை சரி செய்யவும் உதவுகிறது. மஞ்சளை பால் மற்றும் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். இது தவிர, ஃபேஸ்பேக்குகளிலும் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

இலவங்கப்பட்டை

இதை உட்கொள்வது உடல் எடை இழப்பு முதல் சளி, இருமல் போன்ற அனைத்திற்கும் பயனுள்ளதாக அமையும். அதே போல, இந்த மூலிகையானது இயற்கையாகவே சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் வயதான எதிர்ப்புப் பண்புகள், மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கவும், புதிய செல்களை அதிகரிக்கவும் உதவுகிறது. சருமத்தில் கொலாஜனை அதிகரிக்க இலவங்கப்பட்டை டீயை உட்கொள்ளலாம்.

ஜின்செங்க்

இது சருமத்திற்கு நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், சருமத்தில் கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. ஜின்செங்கை உட்கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள கொலாஜன் மீண்டும் வரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Blood Flow During Periods: மாதவிடாய் சமயத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க பாலுடன் இந்த 4 பொருள்களைச் சேர்த்துக்கோங்க

அஸ்வகந்தா

இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இவற்றை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கும், இயற்கையாகவே கொலாஜனை அதிகரிக்கவும் உதவுகிறது.

முருங்கைக்காய்

சரும ஆரோக்கியத்திற்கு முருங்கைக் காய் பெரிதும் உதவுகிறது. இதில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனை உட்கொள்வது சருமத்தில் இயற்கையாகவே கொலாஜனை அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இந்த மூலிகைகளை உட்கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள கொலாஜனை இயற்கையாகவே அதிகரிக்கலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவு பழக்கம் சரும பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயற்கையாகவே கொலாஜனை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் உங்கள் சருமத்தை காக்க வேண்டுமா? உங்களுக்கான ஆயுர்வேத உணவு பட்டியல் இங்கே

Image Source: Freepik

Read Next

ரொம்ப நேரம் வேலை செஞ்சி கண் ப்ரஷரா இருக்கா? இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்