$
Blood Flow Increasing Foods During Periods: மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வயிற்று வலி, உடல் பிடிப்புகள், குறைந்த இரத்த ஓட்டம், தசை வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சில பெண்களுக்கு குறைந்த இரத்தப்போக்கு பிரச்சனைகள் இருக்கலாம். இந்த குறைந்த இரத்த ஓட்டத்திற்கு எடை ஏற்ற இறக்கங்கள், தைராய்டு, மன அழுத்தம், சமநிலையற்ற ஹார்மோன்கள், சரியான உணவை எடுத்துக் கொள்ளாதது போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. இது மாதவிடாய் அறிகுறிகளைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு வலிமை தருகிறது. இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பாலுடன் சில ஆரோக்கியமான பொருள்களை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். பாலில் ஏராளமான கால்சியம் நிறைந்துள்ளதால் இவை எலும்புகளை பலப்படுத்துகிறது. மாதவிடாய் காலங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பாலுடன் எதைக் கலக்க வேண்டும் என்பது குறித்து சுதா கிளினிக்கின் ஆயுர்வேத மருத்துவர் அல்கா ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair Growth: முடி கொட்டாம அடர்த்தியா வளர செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்க போதும்
மாதவிடாயின் போது இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும் உணவுகள்
மாதவிடாய் காலங்களில் பெண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பாலுடன் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டிய சில பொருள்களைக் காணலாம்.
வெல்லம்
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் வெல்லம் கலந்த பாலைக் குடிக்கலாம். இது உடல் பலவீனஹ்தை நீக்குவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்த ஓட்டப் பிரச்சனைக்கு நிவாரணம் தருகிறது. இதற்கு வெல்லத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்களின் உள்ளடக்கமே காரணமாகும். மேலும், வெல்லத்தில் உள்ள செலினியம் மற்றும் மக்னீசியம் போன்றவை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

இஞ்சி
மாதவிடாயின் போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இஞ்சியை பாலுடன் சேர்த்து அருந்தலாம். மாதவிடாயின் போது இஞ்சியை உட்கொள்வது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இஞ்சியில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு ஒரு கப் பாலை சூடாக்கி, 1 அங்குலம் இஞ்சியைத் தட்டி பாலில் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த பாலில் தேன் கலந்து வடிகட்டி குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Body Detox: உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவும் சூப்பர் மூலிகைகள்
இலவங்கப்பட்டை
மாதவிடாய் காலங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் பெண்களின் மாதவிடாய் காலங்களின் நன்மை பயக்கும். இலவங்கப்பட்டையை உட்கொள்வது உடல் சூட்டை அதிகரிக்க உதவுகிறது. இந்த சூழ்நிலையில் 1 கப் பாலில் 1/4 தேக்கரண்டி இலவங்கப்பட்ட தூள் சேர்த்து இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். இலவங்கப்பட்டை கலந்த பால் அருந்துவது நல்ல தூக்கத்தைத் தருவதுடன் உடல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
மஞ்சள்
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது மாதவிடாய் காலங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சள் பால் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதற்கு 1 கப் பாலில் 1/4 தேக்கரண்டி அளவு மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான பிறகு குடிக்க வேண்டும். மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மாதவிடாய் வலியை நீக்குவதுடன் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, இதில் ஏதேனும் ஒரு பொருள் கலந்த பாலைக் குடிக்கலாம். எனினும், ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பின், மருத்துவரை அணுகிய பின்னர் இதை உட்கொள்வது நல்லது. அதே சமயம், இந்த பொருள்களை சிறிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Pneumonia Ayurvedic Remedies: நிம்மோனியா பாதிப்பால் அவதியா? இந்த ஆயுர்வேதிக் டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version