Expert

Hibiscus For Hair Growth: முடி கொட்டாம அடர்த்தியா வளர செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்க போதும்

  • SHARE
  • FOLLOW
Hibiscus For Hair Growth: முடி கொட்டாம அடர்த்தியா வளர செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்க போதும்


Benefits Of Hibiscus Flower And Leaves For Hair: இன்று பலரும் சரும மற்றும் முடி பராமரிப்புகளில் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் முடி மற்றும் சரும பராமரிப்புக்காக இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வைக்க விரும்புகின்றனர். அந்த வகையில் தலைமுடிக்கு மிகவும் பயனுள்ளதாக செம்பருத்தி பயன்படுத்தப்படுகிறது. இதில் அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அதிலும் செம்பருத்தி பூக்கள் மட்டுமின்றி செம்பருத்தி இலைகள், மொட்டுகள் போன்றவையும் தலைமுடிக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா? ஆம். செம்பருத்தி இலைகள், மொட்டுகள், பூக்கள் போன்றவை பல்வேறு வகையான முடி பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இது தொடர்பாக ஆயுர்வேத தைராய்டு நிபுணர் டாக்டர் அல்கா விஜயன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் கூந்தலுக்கு செம்பருத்தி இலைகள், பூக்கள் மற்றும் மொட்டுகள் தரும் நன்மைகள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pneumonia Ayurvedic Remedies: நிம்மோனியா பாதிப்பால் அவதியா? இந்த ஆயுர்வேதிக் டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.

தலைமுடிக்கு செம்பருத்தி இலைகள் பயன்படுத்தும் முறை

செம்பருத்தி இலைகள் ஷாம்பு தயாரிக்கப் பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளால் முடி பலவீனமாக மற்றும் உயிரற்றதாக மாறி வருகிறது. இதற்குத் தீர்வு தரும் விதமாக செம்பருத்தி இலைகளைப் பயன்படுத்தலாம். செம்பருத்தி இலைகளால் தயாரிக்கப்பட்ட ஷாம்புவை வாரம் இருமுறையாவது பயன்படுத்த வேண்டும்.

கூந்தலுக்கு செம்பருத்தி மொட்டுகள்

செம்பருத்தி மொட்டுகள் கலவையை வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம். இதற்கு தேவைக்கேற்ப செம்பருத்தி மொட்டுகளை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஷாம்பு பயன்படுத்துவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த கலவையை நேரடியாக உச்சந்தலையில் தடவ வேண்டும். செம்பருத்தி மொட்டுக்கள் கலவை தயாரிக்க ஆயுர்வேத நிபுணரின் உதவி பெறலாம். மேலும் இந்த பேஸ்ட் தயாரிக்க மற்ற பொருள்களையும் பயன்படுத்தலாம்.

தலைக்கு செம்பருத்தி பூக்கள் பயன்படுத்துவது எப்படி

செம்பருத்தி பூக்களைக் கொண்டு எண்ணெய் தயார் செய்யப்படுகிறது. இதை வாரத்திற்கு இரு முறையாவது பயன்படுத்தலாம். செம்பருத்தி எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வர விரைவில் பலனைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!

கூந்தலில் செம்பருத்தி இலைகள், மொட்டுகள், பூக்கள் பயன்படுத்துவதன் நன்மைகள்

  • செம்பருத்தி மொட்டுகளின் கலவையை உச்சந்தலையில் தேய்ப்பதன் மூலம், அதன் துளைகள் திறந்து ஸ்கால்ப் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியை வலுப்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • முன்கூட்டியே முடி நரைக்கும் பிரச்சனை உள்ளவர்கள் செம்பருத்தி எண்ணெய், ஷாம்பு அல்லது மொட்டுகளின் கலவையைப் பயன்படுத்தலம். இதன் பண்புகள் முடி நரைக்கும் செயல்முறையைக் குறைக்கிறது.
  • இன்று பலரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால், அதிகளவு முடி உதிர்வு பிரச்சனையைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு செம்பருத்தி பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது முடி உதிர்வைத் தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், இவை உலர்ந்த மற்றும் உயிரற்ற முடி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது.

செம்பருத்தியை யார் பயன்படுத்தக்கூடாது?

சைனஸ் பிரச்சனை அல்லது கர்ப்பப்பை வாய் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் செம்பருத்தி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் செம்பருத்தியைப் பயன்படுத்தினால், அது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: Ginger For Digestion: நிறைய சாப்பிட்டு ஜீரணம் ஆகலயா.? இஞ்சியை இப்படி எடுத்துக்கோங்க.

Image Source: Freepik

Read Next

Sirukan Peelai Benefits: சிறுநீரக பிரச்னைக்கு குட்பை சொல்லுங்க.. அதான் சிறுகண்பீளை இருக்கே..!

Disclaimer