Sirukan Peelai Benefits: சிறுநீரக பிரச்னைக்கு குட்பை சொல்லுங்க.. அதான் சிறுகண்பீளை இருக்கே..!

  • SHARE
  • FOLLOW
Sirukan Peelai Benefits: சிறுநீரக பிரச்னைக்கு குட்பை சொல்லுங்க.. அதான் சிறுகண்பீளை இருக்கே..!

படிப்பு, விளையாட்டு, வேலை, சாதனைகள் என இவை அனைத்திலும் கவனம் செலுத்தும் நாம், நம் உடல் மீது கவனம் வைக்க மறந்துவிடுகிறோம். போட்டி நிறைந்த உலகில் ஓடும் நேரத்தில் தண்ணீர் குடிப்பதை நாம் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம். இதுவே பாதி வியாதிகளுக்கு காரணம். 

பொதுவாக சிலர் பொது கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு அவசரமாக இருந்தாலும் அடக்கி வைத்துக்கொண்டு வீடு சென்று தான் சிறுநீர் கழிப்பார்கள். இதுவும் சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக திகழ்கிறது. 

நம் உடலில் நீர் குறையும் போது, சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சிறுநீரக கல், சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீர் பை பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் வலி மற்றும் வேதனைகள், உங்களை நரகத்திற்கு இழுத்துச்செல்லும். 

சிறுநீரக பிரச்னைகளில் இருந்து விடுபட நாம் பல வழிகளில் முயன்று வருகிறோம். மருந்து மாத்திரைகள், கை மருத்துவம் என எதையும் விட்டு வைப்பதில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும், ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

இதையும் படிங்க: Herbs For Body Detox: உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவும் சூப்பர் மூலிகைகள்

ஆயுர்வேதத்தில் சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க ஒரு சூப்பர் தீர்வு உள்ளது. அதற்கு ஆயுதமாக பயன்படுவது சிறுகண்பீளை மூலிகை தான். இவை எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கும். ஆனால் நாம் இதை கவனிக்காமல் கடந்து சென்றிருப்போம். இதனால் சிறுநீரகத்திற்கு என்ன நன்மை என்பதை இங்கே காண்போம். 

சிறுநீரகம் வலுப்பெற சிறுகண்பீளை மூலிகை.! (Sirukan Peelai For Kidney)

சிறுகண்பீளை மூலிகையை பொங்கல் பூ என்றும் அழைப்பர். இவை அளவில் சிறியவை. இதன் பூக்களும் சிறிதாகவும் வெண்மையாகவும் இருக்கும். இவை கொத்துக்கொத்தாக ஆங்காங்கே வளர்ந்திருக்கும். அதாவது சாலை ஓரம், குளக்கரை ஓரம், மற்றும் தரிசு நிலங்கள் போன்றவற்றில் வளர்ந்திருக்கும்.

சிறுகண்பீளை மூலிகை வெப்பத் தன்மை கொண்டது. இது சிறுநீரின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை விரட்டுகிறது. உங்களுக்கு சிறுநீர் பிரச்னை இருந்தால், நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் சிறுகண்பீளை பொடியை வாங்கி, காலை மற்றும் மாலையில் உணவுக்கு அரை மணி நேரம் முன் தண்ணீரில் கலந்து குடிக்கவும். 

சிறுகண்பீளை மூலிகை கிடைத்தால், அதனை 1 கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். கால் கப் அளவு வரும் வரை சுண்ட விடவும். இதனை காலை மற்றும் மாலை இருவேளையும், சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளே வராது. 

பின் குறிப்பு

இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலோ அல்லது நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தாலோ, இதனை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

Image Source: Freepik

Read Next

உடம்பை இரும்பாக்கும்… வாழைப்பழத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்ந்து சாப்பிடுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்