Sat Sep 12, 2026 | 01:44 AM IST

Doctor Verified

Ginger For Digestion: நிறைய சாப்பிட்டு ஜீரணம் ஆகலயா.? இஞ்சியை இப்படி எடுத்துக்கோங்க.

Is Ginger Good For Digestion: பெரும்பாலானோர் சாதாரண டீயை விட இஞ்சி கலந்த டீயை அதிகம் விரும்புவர். ஏனெனில் இஞ்சி ஆனது தேநீரின் சுவையை பல மடங்கு அதிகரிக்கிறது. அதே சமயம், இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வழக்கமான உணவில் இஞ்சியை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள வீக்கத்தை நீக்குவது முதல் மன அழுத்தம், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. அதே போல, செரிமானம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி சிறந்த தீர்வாக அமைகிறது. இவை அஜீரணம், வயிற்று வாயு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!

செரிமான பிரச்சனைக்கான காரணம்

செரிமானப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் குடலில் நச்சுக்களின் அளவு அதிகமாக அதிகரிப்பதே ஆகும். இந்த நச்சுக்களை நீக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது. இஞ்சியை சரியாக எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இதில் செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இஞ்சி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சைதாலி ரத்தோர் (பிஏஎம்எஸ் ஆயுர்வேதா) இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் விளக்கியுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

செரிமானத்திற்கு இஞ்சி தரும் நன்மைகள்

டாக்டர் சைதாலி ரத்தோரின் கூற்றுப்படி,” சமையல் பொருளான இஞ்சியை எதாவதொரு வகையில் நாம் தினந்தோறும் எடுத்துக் கொண்டுள்ளோம். இது இயற்கையாகவே செரிமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு இதன் மருத்துவ குணங்களே காரணமாகும்.” என்று கூறியுள்ளார்.

இஞ்சியை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் திரிதோஷத்தை சமநிலைப்படுத்தி, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும், இஞ்சியை எடுத்துக் கொள்வது செரிமானத்தை பலப்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.

வலுவான செரிமானத்திற்கு இஞ்சி உட்கொள்ளும் முறை

சாப்பிடும் முன் இஞ்சி

உணவுக்கு முன்னதாக ஒரு சிறிய துண்டு புதிய இஞ்சியை அதை கல் உப்புடன் மென்று உண்ண வேண்டும். இது படிப்படியாக பசியை அதிகரிக்கும். இதனுடன், வாய்வு மற்றும் இரைப்பை பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீரில் இஞ்சி சேர்த்து ஒரு நாளைக்கு இரு முறை குடிக்கலாம். இவை செரிமான பிரச்சனையிலிருந்து எளிதில் நிவாரணம் தரும்.

மசாலாவாக பயன்படுத்துதல்

காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற வழக்கமான உணவுகளில் புதிய இஞ்சியை மசாலாப் பொருளாக சேர்த்துக் கொள்ளலாம். இது உணவை எளிதில் ஜீரணிக்க வழிவகுக்கும்.

புதிய இஞ்சியை யார் சாப்பிடக்கூடாது தெரியுமா?

உடலில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கும், இதன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் புதிய இஞ்சி தேவைப்படுகிறது. ஆனால், உடலில் அதிக அமிலத்தன்மை அல்லது பித்தம் போன்ற ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், இஞ்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எனினும், நோய் முற்றிலும் குணமான பிறகு, அதன் அறிகுறிகள் மறைந்த பின் இஞ்சியை உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Digestive Problem Remedies: செரிமானத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.

Image Source: Freepik

Read Next

Digestive Problem Remedies: செரிமானத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content