Turmeric And Ginger: இஞ்சி மற்றும் மஞ்சளை ஒன்றாக எடுத்துக் கொள்வது நல்லதா? கெட்டதா?

  • SHARE
  • FOLLOW
Turmeric And Ginger: இஞ்சி மற்றும் மஞ்சளை ஒன்றாக எடுத்துக் கொள்வது நல்லதா? கெட்டதா?

இஞ்சியின் நன்மைகள்

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சி இதன் சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்படுகிறது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. குமட்டலைக் குறைப்பதற்கும், வலியை எதிர்த்துப் போராடுவதற்கும் இஞ்சி சிறந்த நன்மை பயக்கும். மேலும், இது ஜிஞ்சரோல்ஸ் மற்றும் பாரடோல்ஸ் உள்ளிட்ட பல்வேறு செயலில் உள்ள சேர்மங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. இஞ்சி குறித்து யுஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், கர்ப்பம் தொடர்பான குமட்டலைத் தணிக்க இஞ்சி உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கீல்வாதம், மாதவிடாய் பிடிப்புகள் போன்ற நிலைமைகளில் வலியை நிர்வகிப்பது மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் குறிப்பான்களை மேம்படுத்துவதில் இஞ்சி செயல்திறன் மிக்கதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் அளவுக்கு அதிகமா பாதாம் சாப்பிடுவதில் இத்தனை விளைவுகள் இருக்கா?

மஞ்சள் தரும் ஆரோக்கிய நன்மைகள்

மஞ்சள் அதன் நிறம் மற்றும் தனித்துவமான பண்புகளுக்காக அறியப்பட்டது. மஞ்சளில் உள்ள குர்குமின் கலவை, அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்காக அறியப்பட்ட ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். கீல்வாதம் முதல் வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறியின் அறிகுறிகளை ஆற்றும் வரை, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தீர்க்க மஞ்சள் உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் ஜலதோஷம், கீல்வாதம், அழற்சி குடல் நோய் (IBD), வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற அழற்சி நிலைகளை நிர்வகிக்க உதவுகிறது.

இஞ்சி மற்றும் மஞ்சளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது நல்லதா?

இவை இரண்டுமே அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற நன்மைகளின் கலவையைத் தருகிறது. இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து எடுத்துக் கொள்வது வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறந்ததாக அமைகிறது.

எனினும், இந்த மசாலாப் பொருள்களை இணைப்பதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆதரிக்கக் கூடிய சான்றுகள் குறைவாகவே உள்ளது. இவை இரண்டுமே ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பினும், அதிகளவு எடுத்துக் கொள்வது இரைப்பை குடல் அசௌகரியம் மற்றும் சில மருந்துகளுடன் சாத்தியமான தொடர்பு போன்ற அபாயங்களை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Drinking Salt Water: குடிநீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

இஞ்சி மற்றும் மஞ்சள் உட்கொள்வதன் விளைவுகள்

இஞ்சி, மஞ்சள் இரண்டுமே ஆரோக்கியமான நன்மைகளைத் தந்தாலும், சாத்தியமான பக்கவிளைவுகளையும் தருகிறது. இதனை அதிகளவு உட்கொள்வது நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் கொளாறு மற்றும் இன்னும் சிலருக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

அதே சமயம், இரத்த சர்க்கரை, இரத்தம் உறைதல் அல்லது இரத்த அழுத்தத்தை பாதிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், இஞ்சி மற்றும் மஞ்சள் மருந்துகள் எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இந்த மசாலா பொருள்கள், இந்த மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம்.

மஞ்சள் மற்றும் இஞ்சியை சரியாக உட்கொள்வது எப்படி?

இஞ்சியை சரியாக உட்கொள்ள,  புதிய இஞ்சி வேரைத் தேர்ந்தெடுக்கலாம். பின், சிறிது கரண்டி அல்லது பீலரை பயன்படுத்தி இஞ்சியை உரிக்க வேண்டும். அதன் பிறகு, அதை துண்டுகளாக இடிக்கவும் அல்லது தட்டவும். இஞ்சி டீ தயார் செய்ய, சூடான நீரில் துருவிய இஞ்சியைச் சேர்த்து குடிக்கலாம். ஸ்மூத்திகள், சூப்கள்,ஸ்டிர் ஃபிரைஸ் போன்றவற்றில் நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கலாம். இது வலுவான சுவையைக் கொண்டிருப்பதால், சிறிய அளவுடன் தொடங்குவது நன்மை பயக்கும்.

மஞ்சளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அதீத நன்மைகளைத் தருகிறது. இதை பால், கருப்பு மிளகு மற்றும் இனிப்புடன் சேர்த்து மஞ்சள் பாலாக அருந்தலாம். மற்றொரு வழியாக, மஞ்சள் அல்லது பொடியை சூடான நீரில் ஊறவைத்து, இதில் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். அன்னாச்சி மற்றும் மாம்பழம் போன்ற பழங்களுடன், ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து காலையில் ஸ்மூத்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஏன் வால்நட்டை ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Bed Drinks: தூக்கம் வரவில்லையா.? அப்போ இரவில் இதை மட்டும் குடிக்கவும்.!

Disclaimer