Thu Oct 29, 2026 | 10:53 AM IST

நல்ல செரிமானம் முதல் சரும பராமரிப்பு வரை.. கேரட்டில் இஞ்சி சேர்த்து குடிப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

Benefits of carrot and ginger juice: காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அவ்வாறு காலையில் இஞ்சி மற்றும் கேரட் சாறு எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. இதில் காலையில் கேரட் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
நல்ல செரிமானம் முதல் சரும பராமரிப்பு வரை.. கேரட்டில் இஞ்சி சேர்த்து குடிப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?நல்ல செரிமானம் முதல் சரும பராமரிப்பு வரை.. கேரட்டில் இஞ்சி சேர்த்து குடிப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

Benefits of carrot and ginger juice in the morning: அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்களை உட்கொள்வது அவசியமாகும். குறிப்பாக, காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பானங்கள் அன்றைய நாள் முழுவதும் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியதாக அமைகிறது. மேலும் இது உடலை ரீசார்ஜ் செய்ய உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். அவ்வாறு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் கேரட் மற்றும் இஞ்சி சாறு மிகவும் நன்மை பயக்கும்.

இவை உடலுக்கு வெவ்வேறு வழிகளில் பயனளிக்கக்கூடிய புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சுவையான காலை பானமாக அமைகிறது. அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு கேரட் மற்றும் இஞ்சி சாற்றை உட்கொள்வதல் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Carrot beetroot juice benefits: தினமும் கேரட் பீட்ரூட் சாறு அருந்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கேரட் மற்றும் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்திற்கு

இஞ்சி ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை செரிமான நொதிகளைத் தூண்டி வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. அதே சமயம், கேரட் சாறு வயிற்றுப் புறணியை ஆற்ற உதவுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், அமிலத்தன்மை அல்லது வாயுவைப் போக்க வழிவகுக்கிறது. ஆய்வு ஒன்றில், ஒரு கப் நறுக்கிய கேரட்டில் சுமார் 3.58 கிராம் நார்ச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது செரிமான அமைப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. மேலும், கேரட்டில் உள்ள போதுமான நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், செரிமான சுரப்பு மற்றும் நொதிகளைத் தூண்டுகிறது. இது ஊட்டச்சத்து முறிவு மற்றும் உறிஞ்சுதலை ஆதரிக்கவும், இரைப்பை குடல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

கேரட், இஞ்சி சாறு அருந்துவது வீக்கத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இதய பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வின் படி, தினமும் புதிய கேரட் சாறு குடிப்பது ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிக்கிறது.

இது இதய நோய்க்குக் காரணமாக விளங்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. இஞ்சியில் உள்ள உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்களான டெர்பீன்கள் மற்றும் ஷோகோல்ஸ் போன்றவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

கேரட்டில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. ஆய்வு ஒன்றில், கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள், வைட்டமின்களின் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தடுப்பு விளைவுகள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களுக்கு பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Carrot Health Benefits: எடை இழப்பு முதல்.. சரும ஆரோக்கியம் வரை.. கேரட் சாப்பிடுவதன் நன்மைகள் இங்கே..

கண்களின் ஆரோக்கியத்திற்கு

கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதால், இது வைட்டமின் ஏ ஆக செயல்பட்டு, நல்ல கண் பார்வைக்கு வழிவகுக்கிறது. ஆய்வில், கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உடலால் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். மேலும், கேரட்டில் லுடீன் என்ற ஆக்ஸிஜனேற்றமும் உள்ளது. இது வயது தொடர்பான மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்கிறது.

சரும ஆரோக்கியத்திற்கு

இஞ்சியின் சுத்திகரிப்பு பண்புகள் மற்றும் கேரட்டின் ஆக்ஸிஜனேற்றிகள் நச்சுக்களை வெளியேற்றவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது. இவை சருமத்தை உள்ளிருந்து தெளிவாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் இதன் அதிகளவிலான கரோட்டினாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலங்கள், ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது.

இது சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் முன்கூட்டிய வயதானதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இஞ்சியில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து சரும செல்களைப் பாதுகாக்கிறது. இது சருமம் வயதாவதை மெதுவாக்குவதுடன், சுருக்கங்களைக் குறைக்கவும், புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

கேரட் மற்றும் இஞ்சி சாறு தயாரிக்கும் முறை

கேரட் மற்றும் இஞ்சி சாறு தயார் செய்ய, 2-4 கேரட் மற்றும் 1 அங்குல இஞ்சி துண்டுகளை கழுவி, அதன் தோலை உரித்து, நறுக்க வேண்டும். இதை 1 கப் தண்ணீருடன் சேர்த்து வடிகட்டலாம். இதில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றை பிழிந்து எடுக்கலாம். இதைப் புதிதாக பரிமாற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் எடை குறைக்க உதவுமா.? தெரிஞ்சுக்கலாம் வாங்க..

Image Source: Freepik

Read Next

→ இது தெரிஞ்சா இனி நீங்களும் சேப்பங்கிழங்கு சாப்பிடுவீங்க.. அவ்ளோ நன்மைகள் குவிந்திருக்கு

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.