Sat Sep 12, 2026 | 02:02 AM IST

Doctor Verified

Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!

Ways To Eat Pumpkin Seeds: குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், பூசணி விதைகளை எடுத்துக் கொள்ளலாம். கடுமையான குளிர்காலத்தில் பூசணி விதைகளைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதில் மாங்கனீசு, பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் இதில் பல வகையான வைட்டமின்கள் நிறைந்த ஒமேகா-6 கொழுப்பு மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பூசணி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. குளிர்காலத்தில் பூசணி விதைகளை உட்கொள்வதன் சரியான வழி மற்றும் நன்மைகள் குறித்து ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.

குளிர்காலத்தில் பூசணி விதைகளை உட்கொள்வதன் நன்மைகள்

பூசணி விதைகளை உட்கொள்வது குளிர்காலத்தில் பல்வேறு நன்மைகளைத் தரலாம். இதில் பூசணி விதை தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

நீரிழிவு நோய்

இன்று பலரும் பாதிக்கப்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகவே நீரிழிவு நோயும் உள்ளது. நீரிழிவு நோய்க்கு பூசணி விதைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். குளிர்காலத்தில் பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

பூசணி விதைகளில் துத்தநாகம், வைட்டமின் ஈ போன்றவை ஏராளமாக உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் குறைந்த நோயெதிர்ப்புச் சக்தி காரணமாக மக்கள் பலரும் அடிக்கடி சளி, இருமலால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் பூசணி விதைகள் உட்கொள்வது நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.

ஆரோக்கியமான சருமம் மற்றும் முடிக்கு

பூசணி விதைகளில் உள்ள நல்ல அளவிலான துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது. இவை சருமம் மற்றும் முடி இரண்டிற்கும் ஆரோக்கியத்தைத் தருகிறது. எனவே பூசணி விதைகளைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் சருமத்தை அழகாக வைத்திருக்கலாம். மேலும் முடியின் தரமும் சிறப்பாக அமையும்.

உடல் எடை இழப்பிற்கு

குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிப்பால் பலரும் சிரமப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் பூசணி விதைகளை உட்கொள்வது உடல் எடை இழப்பு பயணத்தை எளிதாக்கலாம். பூசணி விதையில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

பூசணி விதையில் அமினோ அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இந்நிலையில் பூசணி விதைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Rules for Eating Fruits: நீங்க பழங்கள் அதிகம் சாப்பிடுபவரா? அப்ப இப்படி சாப்பிடுங்க.

Image Source: Freepik

Read Next

Ginger Juice: குளிர்காலத்தில் இஞ்சி சாறு குடித்தால்.. இந்த அற்புத ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கே..!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content