Fri Sep 11, 2026 | 11:15 PM IST

Expert

பசியின்மை முதல் குடல் ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் சீதாப்பழம் தரும் அதிசய நன்மைகள்

குளிர்காலத்தில் சீதாப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். சீதாப்பழத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் குளிர்காலத்தில் சீதாப்பழம் உட்கொள்வது என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இந்த வரிசையில் பழ வகைகளில் சீதாப்பழம் ஒரு சிறந்த தேர்வாகும். சர்க்கரை ஆப்பிள் என்றழைக்கப்படும் சீதாப்பழம் ஒரு வெப்பமண்டல பழமாகக் கருதப்படுகிறது. இது செரிமோயா, சீதாபல், ஷரிஃபா மற்றும் காளையின் இதயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சீத்தாப்பழங்கள் வெள்ளை நிற சதைப்பற்றுள்ளதாகும். மேலும் இதன் விதைகள் பொதுவாக கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

பழுத்த சீத்தாப்பழங்கள் மிகவும் மென்மையான, இனிப்பு மணம் கொண்டதாகும். இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே தான், அன்றாட உணவில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சேர்க்கப்பட அறிவுறுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், மற்றும் கண் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். குறிப்பாக, இதை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

இதில் குளிர்காலத்தில் சீதாப்பழம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சஃபால் சாவ்லா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

சீதாப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சீதாப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்களும், கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

சீதாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இரும்புச்சத்து அளவை அதிகரிக்கும்

  • சீதாப்பழத்தில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வைக் குறைக்கவும், சிறந்த ஹீமோகுளோபினை ஆதரிக்கவும் உதவுகிறது.
  • இதில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் சிறந்த உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.
  • இரும்புச்சத்து குறைவாக உள்ள அல்லது குறைந்த ஆற்றல் கொண்ட பெண்களுக்கு சிறந்த தேர்வாக சீதாப்பழம் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Custard Apple Leaves: சரும (ம) கூந்தல் பிரச்சினையை சரிசெய்ய சீதாப்பழ இலையை எப்படி பயன்படுத்துங்க!

குடல் ஆரோக்கியத்திற்கு

  • சீதாப்பழத்தில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் செரிமானத்தை சீராக வைத்திருக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
  • சீதாப்பழம் உட்கொள்வது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • குறிப்பாக, குளிர்காலத்தில் இதை உட்கொள்வது வயிறு கனமாக உணரும் நாட்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

பளபளப்பான சருமம்

  • சீதாப்பழம் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை கொலாஜனை அதிகரித்து, சரும செல்களை சரிசெய்கிறது.
  • மேலும் இது மன அழுத்தம் அல்லது மாசுபாட்டால் ஏற்படும் மந்தநிலையைக் குறைக்க உதவுகிறது.
  • சீதாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், இயற்கையான, ஆரோக்கியமான சரும பளபளப்பைப் பெறலாம்.

View this post on Instagram

A post shared by Diet Bliss by Safal 🍀 (@safal.chawla)

இயற்கை ஆற்றல் மற்றும் பசி கட்டுப்பாடு

  • சீதாப்பழத்தை உட்கொள்வது மெதுவாக வெளியிடும் இயற்கை சர்க்கரையைக் கொண்டுள்ளது. இது மணிக்கணக்கில் ஆற்றலை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
  • இதில் உள்ள இயற்கை சர்க்கரையானது, திடீர் பசி மற்றும் இனிப்பு பசியைத் தடுக்கிறது.
  • குறிப்பாக, காலை வேளையில் பழம் அல்லது உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட ஒரு சிறந்த வழியாக அமைகிறது.

மேலும் நிபுணர், பருவகாலத்திற்கு ஏற்றவாறு சாப்பிட பரிந்துரைக்கிறார். இவ்வாறு சரியான நேரங்களில், ஆரோக்கியமான பழங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடலை குளிர்கால பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Custard Apple Myths: இந்த 4 பிரச்சனை இருப்பவர்கள்… சீதாப்பழம் சாப்பிடலாமா?

Image Source: Freepik

Read Next

பூண்டை எப்படி சமைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பூண்டின் அதிசய நன்மைகள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 29, 2025 19:23 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content