Expert

Rules for Eating Fruits: நீங்க பழங்கள் அதிகம் சாப்பிடுபவரா? அப்ப இப்படி சாப்பிடுங்க.

  • SHARE
  • FOLLOW
Rules for Eating Fruits: நீங்க பழங்கள் அதிகம் சாப்பிடுபவரா? அப்ப இப்படி சாப்பிடுங்க.

பழங்களை உட்கொள்வது நன்மை தருவதாக இருப்பினும், அதை உட்கொள்ளும் ஓது சில முக்கியமான விதிகளை மனதில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் தவறான வழியில் பழங்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் அதிகளவு தீங்கு விளைவிக்கும். இந்த சூழ்நிலையில் பழங்களிய சாப்பிடுவதற்கான சில அடிப்படை விதிகளைத் தெரிந்து கொள்வது அவசியம். ஆயுர்வேதத்தின் படி, பழங்களைச் சாப்பிடுவதற்கான விதிகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ரேகா ராதாமணி (பிஏஎம்எஸ் ஆயுர்வேதா) இன்ஸ்டாகிராம் பதிவில் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இதில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Herbal Bath Powder: சருமத்தை மென்மையாக்க உதவும் மூலிகை குளியல் பொடியை வீட்டிலேயே இப்படி தயாரிக்கலாம்

பழங்களை சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் (Rules for Eating Fruits)

பழங்களை உண்ணும் போது, இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

பருவ காலத்திற்கு ஏற்ப

வானிலை மற்றும் நேரத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு இயற்கை எப்போதும் சரியான பழங்களை வழங்குகிறது. இதை நீங்கள் ஆண்டு முழுவதும் பார்க்கலாம். சீசனுக்கு ஏற்ப சந்தையில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடலாம்.

பாலுடன் பழங்களைத் தவிர்த்தல்

ஆயுர்வேதத்தின் படி, பழங்கள் கலந்த பால் உட்கொள்வது செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். பால் மற்றும் பழங்கள் இரண்டும் இயற்கையில் வேறுபட்டவையாகும். இவற்றை ஒன்றாக சேர்த்து உட்கொள்வது செரிமான பிரச்சனைகளைத் தரலாம்.

அளவாக உண்பது

எத்தகைய பலன்களைத் தரும் போதிலும், பழங்களை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. பழங்கள் ஜீரணிக்க வெவ்வேறு வகையான சூழல் தேவைப்படுகிறது. எனவே பழங்களை எப்போதும் அளவோடு உட்கொள்ள வேண்டும். மேலும், குடலில் வீக்கம் இருப்பின், பழங்களை சிறிது வேகவைத்து சாப்பிடலாம்.

பழுத்த பழங்களைத் தேர்ந்தெடுப்பது

எப்போதும் பச்சை பழங்களுக்குப் பதிலாக, பழுத்த பழங்களையேத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீக்கம், அமிலத்தன்மை, அஜீரணம், வாயு, நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் பழுத்த பழங்களை உட்கொள்வது நிவாரணத்தைத் தரும்.

இந்த விதிகளைப் பின்பற்றி, பழங்களை உண்ணுவதன் மூலம் அந்த பழங்களில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெறுவதுடன், எந்த வித தீங்குகளிலிருந்தும் உடலைப் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla With Honey Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இது தான்

Image Source: Freepik

Read Next

ஆண்மை குறைப்பாடு டூ மாதவிடாய் வரை; இலவங்கபட்டையின் மேஜிக் குணங்கள்!

Disclaimer