Amla With Honey Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இது தான்

  • SHARE
  • FOLLOW
Amla With Honey Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இது தான்


Empty Stomach Amla With Honey Benefits: உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதில் தேன் மற்றும் நெல்லிக்காய் இரண்டும் தனித்தனியே முறையே பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆம்லாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் பல தீவிர நோய்களைக் குணப்படுத்துவதாக அமைவதால் இது ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்குகிறது. தேனில் உள்ள இரும்புச்சத்தும், நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகளும் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. இதில் தேன் மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

நெல்லிக்காய் உடன் தேன்

நெல்லிக்காய் மற்றும் தேன் கலந்து ஒன்றாக உட்கொள்வது வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை இரண்டிலுமே ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. நெல்லிக்காய் உடன் தேன் கலந்து சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர்.வி.டி.திரிபாதி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Curd Benefits Ayurveda: தயிரின் அனைத்து நன்மைகளையும் பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வழி

தேன் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Honey Amla Benefits)

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த

நெல்லிக்காய் மற்றும் தேனை ஒன்றாகக் கலந்து உட்கொள்வது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இன்சுலின் அளவு பராமரிக்கப்பட்டு நீரிழிவு நோய்க்கு நன்மை தருகிறது.

செரிமான மேம்பாட்டிற்கு

ஆம்லா, தேன் இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உடலில் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும் இது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

இளமையான சருமத்திற்கு

நெல்லிக்காய், தேன் சேர்த்து உட்கொள்வது தோல் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் சருமத்தை இளமையாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Menstruation Ayurvedic Tips: மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத முறைகள்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த

பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தியால், விரைவில் நோய்த்தொற்றுதல்கள் உண்டாகக் கூடும். இதனால், சளி, இருமல் போன்றவற்றால் நாம் விரைவில் பாதிக்கப்படலாம். ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் தேனில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது கூடுதல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.

சளி, இருமல் நீங்க

ஆம்லா, தேன் இரண்டும் சளி மற்றும் இருமலை நீக்க உதவும் சிறந்த மருந்தாகும். இது பல வகையான நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

நெல்லிக்காய் மற்றும் தேன் எப்படி உட்கொள்வது? (How To Eat Amla With Honey)

நெல்லிக்காய் மற்றும் தேனை பல வழிகளில் உட்கொள்ளலாம். நெல்லிக்காயைப் பொடி செய்து தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏதேனும் நோய் அல்லது பிரச்சனை ஏற்பட்டால் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Natural Remedies for Stress Pimples: மன அழுத்தத்தால் ஏற்படும் பருவை போக்க சிறந்த வழிகள்!

Image Source: Freepik

Read Next

Sinus Ayurvedic Remedies: சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த மூன்று ஆயுர்வேத முறைகள் போதும்

Disclaimer