Doctor Verified

Curd Benefits Ayurveda: தயிரின் அனைத்து நன்மைகளையும் பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வழி

  • SHARE
  • FOLLOW
Curd Benefits Ayurveda: தயிரின் அனைத்து நன்மைகளையும் பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வழி

ஆயுர்வேதத்தின் படி தயிரின் நன்மைகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழின் படி, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபோலேட் போன்றவற்றின் நல்ல மூலமாக தயிர் அமைகிறது. தயிரில் பாலை விட குறைந்த அளவிலான லாக்டோஸ் மற்றும் கேலக்டோஸ் உள்ளது. மேலும், வயதானவர்கள் தயிர் உட்கொள்வது அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதத்தின் படி, தயிரின் இயற்கையான புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், செரிமான மேம்பாட்டிற்கும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது. தசை திசுக்களின் உருவாக்கத்தை ஊக்குவித்து, தயிர் வலிமையை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Menstruation Ayurvedic Tips: மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத முறைகள்

ஆயுர்வேதத்தில் தயிர் சாப்பிடும் முறை

மருத்துவர் சோனி அவர்களின் பரிந்துரைப்படி, ஆயுர்வேதத்தில் தயிர் உட்கொள்ளும் போது சில ஆயுர்வேத அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறு கூறுகிறார்.

நாள் நேரம்

ஆயுர்வேதத்தின் படி தயிர் சாப்பிட பகல் நேரம் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக செரிமான அக்னி வலுவாக இருக்கும் மதிய உணவில் சேர்க்கலாம்.

புளிப்பு குணங்கள்

தயிரின் புளிப்பு குணங்கள், வாத தோஷத்திற்கு நன்மை பயக்கிறது. தயிரின் குளிர் தன்மை வலிமையானவர்கள் மற்றும் தடிமனானவர்களைப் (கபா) பாதிக்கக் கூடியதாக அமையும். மேலும் இதன் புளிப்பு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் வெளிப்படும் வெப்ப சக்தியான பிட்டாவை தொந்தரவு செய்யலாம்.

பருவகால நுகர்வு

பருவமழை அல்லது குளிர் காலத்தில், அதிலும் குறிப்பாக இரவில் தயிரை எடுத்துக் கொள்வது சளி தொந்தரவுகளை ஏற்படும். எனவே, இந்த நேரத்தில் தயிர் தவிர்ப்பது நல்லது. தயிரின் குளிர்ச்சித் தன்மையின் காரணமாக கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Guava Leaves Benefits: மழைக்காலத்தில் கொய்யா இலையை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பொருந்தாத உணவுகளைத் தவிர்த்தல்

ஆயுர்வேதத்தில், தயிருடன் கலந்து சாப்பிட சில பொருந்தாத உணவுகளை எடுத்துரைக்கிறது. அதன் படி, பால் அல்லது முலாம்பழம், புளிப்புப் பழங்கள் போன்றவற்றுடன் தயிர் சாப்பிடுவதற்கு எதிரானது. இந்த பொருள்களைத் தயிருடன் சேர்த்து உண்பது செரிமானப் பிரச்சனைகள் மற்றும் நச்சு உருவாவதற்கு வழிவகுக்கலாம்.

தயிரின் ஆற்றலை அதிகரிக்க

ஆயுர்வேத முறைப்படி, தயிருடன் சில பொருள்களைச் சேர்த்து எடுத்துக் கொள்வது, கபாவை அதிகரிக்கும் பண்புகளைத் தணிக்கும். இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், சளி ஏற்படுவதையும் தடுக்கிறது.

குறிப்புகள்

டாக்டர் சோனி அவர்களின் கூற்றுப்படி, தயிரை அதிகமாக உட்கொள்வது தோல் வெடிப்பு, அஜீரணம், இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உடலில் இரத்தம் மிகக் குறைந்த அளவு சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் ஒரு நிலையே இரத்த சோகை என்பதாகும். எனவே, தயிரை மிதமாக எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Bathing Tips : ஆயுர்வேத முறைப்படி எப்படி குளிக்க வேண்டும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Menstruation Ayurvedic Tips: மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத முறைகள்

Disclaimer

குறிச்சொற்கள்