Guava Leaves Benefits In Monsoon: நாம் அனைவரும் பருவமழை அல்லது மழைக்காலத்தை அதிகமாக விரும்புவோம். இருப்பினும், இந்த நேரத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கால கட்டத்தில் நாம் விரைவாக நோய்வாய்ப்படுவோம். அதாவது, சளி, காய்ச்சல், தொண்டை தொற்று, வயிறு பிரச்சினை என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்படி மழை நாட்களில் ஏற்படும் பல பிரச்சனைகளை கொய்யா இலை சரிசெய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், நீங்கள் படித்தது சரிதான்! மழைக்காலங்களில் கொய்யா பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கும். இந்த பழங்கள் உண்பதற்கு எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அதே அளவு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கொய்யா பழங்கள் மட்டும் அல்ல அதன் இலைகளும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக மழைக்காலத்தில்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்
ஆயுர்வேதத்தின் படி, "கொய்யா இலைகள் ஊட்டச்சத்தின் அடிப்படையில் பழங்களை விட அதிக சத்தானவை. மேலும், அவை பல மருத்துவ குணங்கள் கொண்டவை. இதில், பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், பயோஆக்டிவ் கலவைகள், ஆக்ஸிஜனேற்றங்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ரிச் ஆகிய உள்ளது. எனவே, இதை தொடர்ந்து உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
குறிப்பாக இவை மழைக்காலத்தில் ஏற்படும் பல பொதுவான பிரச்சனைகளை சமாளிக்கும் ஒரு மருந்து. புட் பாய்சன், நீர், நச்சுகள், மன அழுத்தம் மற்றும் பலவீனமான செரிமானம் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த இது உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவரும், பஞ்சகர்மா நிபுணருமான டாக்டர் அங்கித் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், மழைக்காலத்தில் கொய்யா இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதை உட்கொள்ளும் முறை குறித்து விரிவாக விளக்கியுள்ளார். அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்…
மழைக்காலத்தில் கொய்யா இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

டாக்டர் அங்கித் அகர்வாலின் கூற்றுப்படி, "மழைக்காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, பேதி அல்லது நீர் மலம் மிகவும் பொதுவானது. இந்நிலையில்,கொய்யா இலைகள் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், அவை இயற்கையில் வாத சமநிலையை ஏற்படுத்துகின்றன. இதை வயிற்றுப்போக்கு ஏற்படும் போது துணைப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
இதன் துவர்ப்பு பண்புகள், வயிற்றுப்போக்கு பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. மழைக்காலத்தில் புதிய கொய்யா இலைகள் வளரும். ஒருவருக்கு லூஸ் மோஷன் பிரச்சனை மற்றும் பேதி இருந்தால், நீங்கள் 3-4 கொழுந்து கொய்யா இலைகளை எடுத்து வாயில் போட்டு மென்று வெந்நீர் குடித்து விழுங்க வேண்டும். இப்படி செய்து வர நல்ல மாற்றம் தெரியும். இதை செய்த பின்னர் ஓரிரு முறை லூஸ் மோஷ போகும், பின்னர் உங்கள் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
இந்த பதிவும் உதவலாம் : கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான ஆயுர்வேத வைத்தியம் இங்கே
இது தவிர, கொய்யா இலைகள் நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் ஒரு இயற்கை மருந்தாகும். இவை நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மழைக்காலத்தில் நோய்வாய்ப்படும்போது நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொண்டால், அதற்கு பதிலாக புதிய கொய்யா இலைகளை மென்று சாப்பிடுங்கள். நிச்சயமாக இதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறுவீர்கள்.
Image Credit: freepik