$
How To Cure Sinus Problem According To Ayurveda: காலநிலை மாற்றங்களால் வைரஸ் தொற்றுக்களின் அபாயம் அதிகரிக்கலாம். இதில் சைனஸ் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமை போன்றவை அடங்கும். சைனஸ் பிரச்சனை காரணமாக சுவாசிப்பதில் சிரமம், மூக்கு, தொண்டை மற்றும் மார்பில் சளி சிக்குதல் போன்றவை ஏற்படலாம். அது மட்டுமல்லாமல், தூசி, மண் அல்லது பிற பொருட்களால் அலர்ஜி ஏற்படும். இதனால், பலருக்கு தும்மல், அரிப்பு, இருமல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
இது தவிர, சில இயற்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் சைனஸ் அல்லது அலர்ஜியில் இருந்து விடுபடலாம். சைனஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற ஆயுர்வேத வைத்தியங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், குடல் ஆரோக்கிய பயிற்சியாளர் மற்றும் ஆயுர்வேத மருத்துவரான டிம்பிள் ஜாங்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். மேலும் இதில் சைனஸ் பிரச்சனையைத் தவிர்க்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eyesight Improving Remedies: கண் பார்வைத் திறனை மேம்படுத்த நீங்க பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வைத்தியங்கள்
சைனஸ் மற்றும் அலர்ஜி பிரச்சனையைப் போக்க உதவும் ஆயுர்வேத வைத்தியம்
ஆயுர்வேத கலவை
வீட்டிலேயே சில ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு சைனஸ் மற்றும் அலர்ஜி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கலாம். அரை டீஸ்பூன் அளவு துருவிய இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் ஒரு டீஸ்பூன் தேன் கலக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலவையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இந்த பண்புகள் சைனஸ் மற்றும் தொண்டையில் சிக்கியுள்ள சளியை அகற்ற உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். பிறகு இரவு தூங்கும் முன் எடுத்துக் கொள்ளலாம்.

சூடான நீர் அருந்துவது
சைனஸ் பிரச்சனையைத் தவிர்க்க மற்றும் சளி சேர்வதை அகற்ற நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை அருந்தலாம். தினமும் சூடான திரவங்களை போதுமான அளவு அருந்துவது சளி திரட்சியைத் தடுக்க உதவுகிறது. அதன் படி, சூப் மற்றும் குழம்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Kidney Health: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க இந்த மூலிகைகளை எடுத்துக்கோங்க
ஆவி பிடிப்பது
அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்சனையைத் தவிர்க்க சூடான நீரில் ஆவி எடுத்துக் கொள்ளலாம். இதற்கு யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் நீரில் கலந்து பயன்படுத்துவது அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது. இந்த யூகலிப்டஸ் எண்ணெயில் வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பல்வேறு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் சளி அறிகுறிகள் மற்றும் சுவாச பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
இதற்கு பாத்திரம் ஒன்றில் தண்ணீர் மற்றும் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து தலையை துண்டு ஒன்றின் உதவியுடன் மூடி, அந்த நீராவியை உள்ளிழுக்க வேண்டும். மேலும், இரவு தூங்கும் முன் ஒரு துளி அளவிலான யூகலிப்டஸ் எண்ணெயை முதுகு, மார்பு, மற்றும் காதுகளுக்குப் பின்னால் தடவிக் கொள்ளலாம். எனினும், இந்த எண்ணெயை முகத்தில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.

சைனஸ் மற்றும் அழற்சி பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற இந்த ஆயுர்வேத வைத்தியங்களைக் கையாளலாம். எனினும், இந்த வழிமுறைகளை மேற்கொண்டு நிவாரணம் பெற இயலாதவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Basil Leaves For Cholesterol: கெட்ட கொழுப்பை சீக்கிரம் குறைக்க துளசி இலையை இப்படி எடுத்துக்கோங்க
Image Source: Freepik