$
How To Relieve Sinus Infection Pain: சைனஸ் தொற்று என்பது நாசிப் பாதையைச் சுற்றியுள்ள துவாரங்கள் வீக்கமடையும் நிலையைக் குறிப்பதாகும். இதனால் சைனஸ் அழுத்தம், சைனஸ் வலி மற்றும் நாசி நெரிசல் போன்றவை ஏற்படலாம். சைனஸ் மூக்குப் பகுதி பக்கத்தில் இருப்பதால், மூக்கு வழியே செல்லக் கூடிய காற்று பைகளில் வைரஸ் தொற்று, அலர்ஜி, சளி திரவம், மூக்கில் இருந்து நீர்வடிதல், தொடர் தும்மல், இருமல், ஜலதோஷம், முகத்தில் வீக்கம்,போன்ற பல பிரச்சனைகள் சைனசிடிஸ் என அழைக்கப்படுகிறது.
மேலும் சைனசிடிஸ் என்பது மூக்கு, நெற்றி மற்றும் கன்னத்து எலும்புகளில் காணப்படும் வெற்று இடங்களான சைனஸின் வீக்கம் என்று கூறலாம். பொதுவாக சைனஸ் பிரச்சனை உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இதில் சைனஸ் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும் சில இயற்கையான சில வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Home Remedies: ஈஸியா தொப்பை குறைய சிம்பிளான வீட்டு முறைகள் இதோ
சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியம்
கரைசலை உள்ளிழுப்பது
உப்புக் கரைசலை உள்ளிழுப்பது, சைனஸ் பிரச்சனையை திறம்பட அழிக்க உதவுகிறது. இதற்கு சிறிது உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலவையை உலர்ந்த ஸ்ப்ரேபாட்டில் ஒன்றில் பயன்படுத்தி தெளிக்கலாம். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வர சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நிறைய திரவங்கள் அருந்துதல்
சைனஸ் வலி அல்லது வேறு எந்த நோய்க்கும் மிக முக்கிய காரணியாக இருப்பது நீரேற்றம் இல்லாமல் இருப்பது ஆகும். சைனஸ் வலியிலிருந்து நிவாரணம் பெற வெதுவெதுப்பான நீரை அருந்தலாம் அல்லது தேநீர்,காபி அல்லது பழச்சாறுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நாசியை துணியால் நனைத்தல்
கடுமையான சைனஸ் வலி மற்றும் அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்கள் உடனடி நிவாரணம் பெற இந்த முறையை மேற்கொள்ளலாம். வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து, கன்னம் மற்றும் மூக்கில் வைக்கும். இது உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Neem Powder Benefits: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்கும் வேப்பம்பூ பொடி. எப்படி பயன்படுத்துவது?
போதுமான ஓய்வு எடுப்பது
சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் சரியான ஓய்வு எடுத்து, மன அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. சைனசிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபட இது இயற்கையான மற்றும் விரைவான வழியாகக் கருதப்படுகிறது. நல்ல தூக்கத்தைப் பெறுவதன் மூலம் சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நீராவி பிடிக்க
நீராவியை உள்ளிழுப்பதன் மூலம் சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். இது சைனஸ் வலியைச் சமாளிக்க உதவும் பயனுள்ள மற்றும் எளிய வீட்டு வைத்தியம் ஆகும். இதற்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதை பெரிய கிண்ணம் ஒன்றில் ஊற்றி நீராவியை உள்ளிழுக்க வேண்டும். தலைக்கு மேல் ஒரு துண்டை வைத்து தலை முழுவதும் நேரடியாக தண்ணீருக்கு மேல் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

அத்தியாவசிய எண்ணெய் பயன்பாடு
சைனஸ் பிரச்சனை நீங்க சில அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எண்ணெயைச் சேர்த்து மூக்கின் வழியாக நீராவியை மெதுவாக உள்ளிழுக்கலாம். எனினும் சைனஸ் பிரச்சனைக்கு இந்த வழியைப் பயன்படுத்தும் முன்னதாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த வழிகளைப் பயன்படுத்தி சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Remedies: தீராத வயிற்று வலி சீக்கிரம் குணமாக இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க
Image Source: Freepik