List Of Ayurvedic Herbs For Hair Growth: முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பலரும் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். சிலர் சந்தைகளில் கிடைக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துவர். ஆனால் சில சமயங்களில் இது முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் அல்லது வேறு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்கை வழிகளைக் கையாள்வது அவசியமாகும்.
அந்த வகையில் இயற்கை முறையாக ஆயுர்வேத சிகிச்சைகள் முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. சில ஆயுர்வேத மூலிகைகளில் முடியை வளர்க்கக் கூடிய ஆரோக்கியமான பண்புகள் நிறைந்துள்ளன. இதில் முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆரோக்கியமான ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இந்தப்பதிவில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Basil Leaves For Cholesterol: கெட்ட கொழுப்பை சீக்கிரம் குறைக்க துளசி இலையை இப்படி எடுத்துக்கோங்க
முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆயுர்வேத மூலிகைகள்
ஆம்லா
ஆம்லா என்ற இந்திய நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முன்கூட்டிய நரையைத் தடுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும் நெல்லிக்காயைப் பயன்படுத்துவது முடி உதிர்வைக் குறைக்கவும், முடிக்கு பொலிவையும் சேர்க்கிறது. இது முடியின் ஆழம் வரை சென்று பலப்படுத்துகிறது.
உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் இந்த எண்ணெயை வடிகட்டி உச்சந்தலை மற்றும் முடியில் தடவலாம். இதை ஓர் இரவு அல்லது ஒரு சில மணி நேரம் வரை வைத்திருப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மற்றொரு முறையாக நெல்லிக்காயை சாறாக அருந்தலாம். இது புத்துணர்ச்சியைத் தருவதாகவும் அமைகிறது.
பிரிங்ராஜ்
இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் மூலிகை ஆகும். இது மூலிகைகளின் ராஜா எனவும் அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பிரிங்ராஜ் சக்திவாய்ந்த ஆயுர்வேத மூலிகையாகும். இதில் மக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டமளித்து, மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது.
எள் அல்லது தேங்காய் எண்ணெயில் பிரிங்ராஜ் இலைகளைச் சேர்த்து, அந்த எண்ணெயை படுக்கைக்கு முன்னதாக உச்சந்தலையில் சேர்க்கலாம். இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, ஓரிரவில் விட்டு விட்டு பின் காலையில் கழுவி விடலாம். தயிருடன் பிரிங்ராஜ் பவுடர், எலுமிச்சைச் சாறு சேர்த்து ஹேர் மாஸ்க் தயார் செய்யலாம்.
வெந்தயம்
வெந்தய விதைகளில் புரோட்டீன்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளது. இது முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதுடன், முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. இவை உச்சந்தலையை ஈரப்படுத்தவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது.
இதற்கு வெந்தய விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, பின் பேஸ்ட்டாக அரைத்து, அதில் தயிர் சேர்க்க வேண்டும். இதை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி 30 நிமிடம் வைத்து பின் கழுவி விடலாம். தேங்காய் எண்ணெயில் வெந்தய விதைகளைச் சேர்த்து கலவை பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும். பின் இதை ஆறவைத்து தலைமுடியில் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணவும்!
வேப்பிலை
வேப்பிலையானது பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உச்சந்தலையில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இதன் பண்புகள் பொடுகுத் தன்மையை நீக்க உதவுகிறது. உச்சந்தலையில் எரிச்சலைத் தணித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.
இதில் வேப்ப இலைகளைத் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு, இதைப் பயன்படுத்தலாம். மற்றொரு முறையாக வேப்ப இலைகளை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, உச்சந்தலையில் தடவலாம். இதை 30 நிமிடம் வரை வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
அலோவேரா
கற்றாழையின் ஈரப்பதமூட்டும் மற்றும் அதன் பல்வேறு பண்புகள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த மூலிகையாகும். கற்றாழையைப் பயன்படுத்துவது பொடுகைக் குறைத்து மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது.
இதற்கு கற்றாழை செடியிலிருந்து கற்றாழை ஜெல்லைத் தனியே பிரித்து, அதை உச்சந்தலை மற்றும் முடியில் தடவலாம். இதை 30 நிமிடங்கள் வரை வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பால் மற்றும் சில துளிகள் அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து ஹேர்பேக் தயார் செய்யலாம். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடம் வரை வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
செம்பருத்தி
செம்பருத்தி பூவில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது. உச்சந்தலைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து மயிர்க்கால்களைத் தூண்டி கூந்தலுக்கு பொலிவைச் சேர்க்கிறது.
இதற்கு பூக்கள் மற்றும் இலைகளை அரைத்து, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது தயிர் கலந்து ஹேர்பேக்கைத் தயார் செய்யலாம். இது உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் பூக்கள் மற்றும் இலைகளை தண்ணீரில் வேகவைத்து, வடிகட்டி முடியை ஷாம்பு செய்து முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இது பொடுகுத் தொல்லையைத் தடுக்க உதவுகிறது.
இந்த ஹேர்பேக் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Face Glowing Tips: முகத்தை பளிச்சினு வைக்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க
Image Source: Freepik