Ayurveda Remedies For Glowing Skin: பெண்கள் பலரும் அழகாக இருப்பதையே அதிகம் விரும்புவர். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதில் சரும பொலிவுக்கு வீட்டு வைத்தியம் மற்றும் ஆயுர்வேத வைத்தியங்களை தங்கள் வழக்கத்தில் சேர்த்து வருகின்றனர். முகத்தை அழகாக வைத்திருக்க சருமத்தை வெளியிலிருந்து சுத்தமாக வைத்திருப்பதுடன், உடலுக்குள் இருந்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைக்க சில ஆயுர்வேத வைத்தியங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. பளபளப்பான சருமஹ்தைப் பெற கையாள வேண்டிய ஆயுர்வேத வைத்தியங்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் சவலியா அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பைக் கொழுப்பை வழித்து எடுக்க… இந்த ஆயுர்வேத பொடி போதும்!
சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள்
சருமத்தை உள்ளிருந்து ஆழமாக பாதுகாப்பாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காணலாம்.
நெய் மற்றும் மாதுளை உட்கொள்வது
பசு நெய், மாதுளை மற்றும் பிற ஆயுர்வேத மூலிகைகளிலிருந்து தாடிமாடி கிரிட் (Dadimadi Ghrit) தயாரிக்கப்படுகிறது. இது உடலில் ஹீமோகுளோபினை மேம்படுத்துவதுடன், இரத்தத்தை நச்சுத்தன்மையாக்குகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை காலை நேரத்தில் அல்லது இரவில் தூங்கும் போது சூடான பால் அல்லது தண்ணீருடன் அரை டீஸ்பூன் கலந்து குடிக்கலாம்.
ஆம்ரபாலியை உட்கொள்ளுதல்
சருமத்தை பளபளப்பாக வைக்க, ஆயுர்வேத ஆம்ரபாலி டீயை உட்கொள்ளலாம். இந்த தேநீர் அருந்துவது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது இரத்தத்தை சுத்திகரித்து சீரான தோனி மற்றும் பளபளப்பைத் தருகிறது. இதற்கு 3 கிராம் அளவு ஆம்ரபாலியை 300 மில்லி நீரில் 7 நிமிடம் வரை கொதிக்க வைத்து பின் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
நெய், தேன் போன்றவற்றை உட்கொள்வது
நெய் மற்றும் தேன் கலவையை 2 முதல் 3 துளிகள் அளவு எடுத்து காலை நேரத்தில் உட்கொள்ளலாம். இவை சருமத்தின் இயற்கையான பளபளப்பைத் தருகிறது. நெய் உட்கொள்வது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்கவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் தேன் உட்கொள்வது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. எந்த வயதினரும் இந்தக் கலவையை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Aak Leaves For Body Pain: உடம்பு வலியை நீக்க உதவும் எருக்கஞ்செடி எண்ணெய்! எப்படி பயன்படுத்தலாம்?
குங்குமப்பூ சீரம்
இரவு தூங்கும் முன்பாக, குங்குமப்பூவை முகத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத்திற்குத் தேவையான பொலிவையும், பளபளப்பையும் தருகிறது.
ஆயுர்வேத ஃபேஸ்மாஸ்க் பயன்பாடு
செம்பருத்தி, ரோஜா, சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ போன்ற மூலிகைகளால் தயார் செய்யபப்ட்ட ஆயுர்வேத ஃபேஸ்மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். இது சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமப் பொலிவை அதிகரிக்கிறது.
சருமத்தை பளபளப்பாக வைக்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களைக் கையாளலாம். இதனுடன், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றைக் கையாள வேண்டும். இது கூடுதல் நன்மைகளைத் தரும்.
இந்த பதிவும் உதவலாம்: Ghee For Cracked Heels: பாத வெடிப்பால் ரொம்ப அவதியா? அதுக்கு இந்த இரண்டு பொருள்கள் போதும்
Image Source: Freepik