Doctor Verified

எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது நல்லது? ஆயுர்வேதம் கூறும் கருத்து இதோ

  • SHARE
  • FOLLOW
எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது நல்லது? ஆயுர்வேதம் கூறும் கருத்து இதோ


How To Eat Fruits According To Ayurveda: உணவுகளை மருந்து போல் சாப்பிட்டால், பிற்காலத்தில் மருந்தை உணவாக சாப்பிடுவதன் அவசியம் இருக்காது. இதில் உண்ணக்கூடிய உணவுப் பொருள்களில் பழங்களும் அடங்கும். அதிலும் பழங்கள் சாப்பிட பெரும்பாலும் வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் பழங்களை உட்கொள்ளலாம்.

ஆனால், ஆயுர்வேதத்தில் பழங்கள் சாப்பிடுவதற்கு சில விதிகள் உள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றாமல் பழங்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். பழங்கள் சாப்பிடுவதற்கான ஆயுர்வேத விதிகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் சவலியா அவர்கள் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Ghee Milk at Night: இரவு தூங்கும் முன் பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ஆயுர்வேதத்தின் படி பழங்கள் சாப்பிடுவதற்கான விதிகள்

  • பழங்களை உட்கொள்ள விரும்புபவர்கள் எப்போதும் தனியாக சாப்பிட வேண்டும். உணவுடன் அல்லது அதற்குப் பிறகு சாப்பிடக் கூடாது.
  • பழத்தைச் சாறாக தயாரிப்பதற்குப் பதில் பழங்களாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • பழங்களை அதே சுவை கொண்ட மற்ற பழங்களுடன் கலந்து உண்ணலாம். ஆனால், பழங்களைத் தொடர்ந்து கலக்க வேண்டாம்.
  • உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது 2 மணி நேரம் கழித்து பழங்களை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  • சூரிய அஸ்தமனத்திற்கு முன் அதாவது மாலை நேரத்தில் பழங்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல விளைவை ஏற்படுத்தும்.
  • பழங்களை தயிர் அல்லது பால் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். விரும்பியவர்கள் தாவர அடிப்படையிலான பால் அல்லது தயிருடன் பழங்களைச் சேர்த்து அவ்வப்போது சாப்பிடலாம்.
  • உணவுடன் அல்லது சாப்பிட்ட உடனேயே பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • செரிமானம் மோசமாக இருப்பது பழச்சாறு குடிக்கலாம். நேரடியாக பழங்களைச் சாப்பிடுவதில் சிரமமாக இருக்கும்.

மனதில் கொள்ள வேண்டியவை

  • பருவகாலத்திற்கு ஏற்ப பழங்கள் உட்கொள்வதை வழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பச்சை பழங்கள் மற்றும் அதிக பழுத்த பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பகல் நேரத்தில் மட்டும் பழங்கள் உண்ணலாம்.
  • காலை நேரத்தில் ஆப்பிள் சாப்பிடுவது அதிக பலன்களைத் தருகிறது.
  • வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Bathing After Eating: சாப்பிட்டவுடன் குளிப்பவர்களா நீங்கள்? அப்ப இத பாருங்க

Image Source: Freepik

Read Next

தொப்பைக் கொழுப்பை வழித்து எடுக்க… இந்த ஆயுர்வேத பொடி போதும்!

Disclaimer