Ghee Milk Benefits: இந்தியாவைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேதம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆங்கில மருத்துவத்தில் இல்லாத சிகிச்சைகள் கூட ஆயுர்வேதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அதனை மிகக்குறைவான மக்களே பின்பற்றி வருகின்றனர். அதில் இரவு தூங்கும் முன்பு பாலில் மஞ்சள் மற்றும் நெய் கலந்து குடிப்பதாகும்.

பால் மற்றும் நெய் இரண்டுமே கொழுப்புச்சத்து நிறைந்தது என்பதால் இதனை இரவில் எடுத்துக்கொள்ள பலரும் அஞ்சக்கூடும். ஆனால் உண்மையில் இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொண்டால், நீங்களே பின்பற்ற ஆரம்பித்துவிடுவீர்கள்.
செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது:

அடிக்கடி வயிற்றுப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் பாலில் நெய், மஞ்சள் சேர்த்துக் குடித்துவர நிவாரணம் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
மூட்டு வலியைக் குறைக்கிறது:
பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மூட்டு வலியைக் குறைக்க நெய் உதவுகிறது.
இந்த பாலை குளிர்காலத்தில் குடிப்பது மூட்டுவலி உள்ளவர்களுக்கும் நல்லது. அவற்றைப் போக்க, வெதுவெதுப்பான பாலில் நெய் மற்றும் மஞ்சள் சேர்த்துக் குடித்துவர உடல் சூடு உண்டாகும். நெய்யில் வைட்டமின் கே2 உள்ளது. இது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
சருமம் பளபளக்க:
நெய் மற்றும் பால் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கிறது. வறண்ட சருமம் குளிர்காலத்தில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். இப்படி பால் குடித்தால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நெய் மற்றும் பாலைத் தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதத்துடன் வைத்திருப்பதுடன் பளபளப்பாகவும் இருக்கும். முகத்தில் உள்ள கறைகளை நீக்க உதவுகிறது.
சளி,இருமலில் இருந்து நிவாரணம் பெற:
குளிர்காலத்தில், சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அடிக்கடி பாதிப்பு ஏற்படும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான பால், நெய் மற்றும் மஞ்சள் கலந்து குடிப்பதால் சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவற்றின் தீவிரத்தையும் குறைக்கிறது.
நெய் பால் செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும். பின்னர் ஒரு கிளாஸ் பால் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அவற்றை ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும். சிறிது ஆறிய பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகலாம்.