$
பண்டைய முன்னோர்கள் பரிசாக தந்த ஆயுர்வேதம் நமக்கு இன்றளவும் பல்வேறு நோய்களை விரட்ட உதவுகிறது. அப்படி ஆயுர்வேதம் தந்த மூலிகைகளில் சிராட்டா எனப்படும் நிலவேம்பு மிகவும் முக்கியமானது. ஆயுர்வேத புத்தகங்களில் நிலவேம்பு அற்புதங்களின் பொக்கிஷம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இது அறிவியல் ரீதியாக ஸ்வெர்டியா சிரைட்டா என்று அழைக்கப்படுகிறது.

இந்த தாவரத்தின் தண்டுகள் மற்றும் பட்டைகள் ஆயுர்வேதத்தில் மலேரியா, நீரிழிவு மற்றும் கல்லீரல் கோளாறுகளைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகை தேநீரை குடித்து தான் நமது முன்னோர்கள் சர்க்கரை நோயில் இருந்து தப்பித்துள்ளனர்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கசப்பான நிலவேம்பு பானத்தை ஒரு கிளாஸ் குடித்து வந்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல அற்புதங்களை செய்யுமாம்.
நிலவேம்பில் நிறைந்துள்ள சத்துக்கள் என்னென்ன?
நிலவேம்பில் இற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், சிரடானின், செராடோல், பால்மிடிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் நன்மை பயக்கும்.

சிரட்டாவில் (நிலவேம்பு) ஸ்வெர்டியமார்டின் என்ற கலவை உள்ளது. இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இது கடுமையான மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிப்பதிலும் இது பயனுள்ளதாக உள்ளது. நிலவேம்பு சொறி, அரிப்பு, வீக்கம் போன்ற சரும பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. இதனால் தான் தண்டு மற்றும் பட்டையைப் பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
நிலவேம்பு டீ செய்வது எப்படி?
நிலவேம்பு தண்டு அல்லது மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இதற்கு சித்த மருந்து கடைகளில் உலர்ந்த தண்டுகள் மற்றும் பட்டைகள் தூளாக விற்கப்படுகின்றன. இருப்பினும் பச்சை பட்டை சிறந்தது.

தண்ணீரில் பச்சை பட்டை அல்லது தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அந்த டீயை சூடாக வடிகட்டி குடித்தால், பல நன்மைகள் கிடைக்கும். உணவுக்குப் பிறகு இந்த டீயைக் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
இந்த டீயை குடிப்பதன் மூலம் சர்க்கரை நோய் பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும். இரத்த குளுக்கோஸ் அளவு உயராது. எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒருமுறை சிராட்டா டீ குடிப்பது மிகவும் நல்லது.
Image Source: Freepik