Side Effects Of Taking Bath After Eating: அன்றாட வாழ்வில் வழக்கமான பழக்க வழக்கங்கள் மாறிப் போகும். நேரம் சென்று குளிப்பது, உணவு சாப்பிட்ட பிறகு குளிப்பது போன்ற அன்றாட நடவடிக்கைகள் இன்று பலரும் பின்பற்றுவதாகும். இன்று பலரும் வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலை நேரத்தில் சோம்பலை உணர்வர்.
இதன் காரணமாக, குளிக்காமலேயே காலை உணவை எடுத்துக் கொள்வோம். இதனால் சாப்பிட்ட பிறகு குளிப்போம். அதிலும் சிலர் சாப்பிட்டவுடனேயே குளிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்வர். ஆனால் உணவு உண்டவுடனேயே குளிப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஏன் தெரியுமா? உணவு சாப்பிட்டவுடன் குளிப்பதால் என்னென்ன உடல் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப நேரம் வேலை செஞ்சி கண் ப்ரஷரா இருக்கா? இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க
சாப்பிட்டவுடன் குளிப்பதால் ஏற்படும் விளைவுகள்
செரிமானத்தைத் தடுக்க
சாப்பிட்டவுடன் குளிப்பது உடலில் ஒட்டு மொத்த இரத்த ஓட்டமும் தடைபடலாம். இதனால், உணவு எளிதில் செரிமானம் அடையாமல் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே சாப்பிடுவதற்கு 1 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பாக குளிக்க வேண்டும்.
உடல் சோர்வு
உணவுண்ட பிறகு செரிமானம் தாமதமாக நடைபெறுவதால சாப்பிட்ட உணவு குடலில் அப்படியே நொதிக்க அல்லது அழுக ஆரம்பித்து விடும். இது நம்மை சோர்வாகவும், மந்தமாகவும் உணரச் செய்கிறது. இதனால் சில சமயங்களில் குமட்டல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
உடல் வெப்பநிலையில் பாதிப்பு
உணவுண்ட உடனே குளிப்பது உடலின் வெப்பநிலையை குறைக்கலாம். இதனால், உடலின் வெப்பநிலையை சீராக்கும் வகையில் கை, கால்கள், முகம் போன்ற உடலின் பிற பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இது உடலின் இயல்புத் தன்மையை பாதிக்கிறது. மேலும் உணவை செரிமானம் செய்ய உதவும் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரத்தத்தின் தட்பம் குறைவதால், உடலின் மற்ற பகுதிகளில் இரத்தம் பாயத் தொடங்குகிறது. இது செரிமானத்தைப் பாதிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Acidity Reducing Tips: சாப்பிட்ட பிறகு அசிடிட்டி பிரச்சனையா? இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க
உண்டவுடன் வெந்நீர் குளியல் எடுக்கலாமா?
சிலர் உணவு உண்டவுடனேயே சூடான நீரில் குளிப்பதை விரும்புவர். ஆனால் இது ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் குளித்த உடனேயே சூடான நீரில் குளிப்பது உடலைக் குளிர்விக்கும். இது உடலின் வெப்ப அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி இயல்பான இரத்த ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும் இதனால் மூளைக்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காமல், தலைச்சுற்றல் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
ஆயுர்வேதம் கூறும் கருத்து
ஆயுர்வேதத்தின் படி, உடலில் உள்ள வெப்பநிலையே உணவுக்கு பிந்தைய செரிமானத்திற்கு காரணமாகிறது. இதனால், சாப்பிட்டவுடனே குளிக்கும் போது செரிமானத்திற்கு உதவும் ஆற்றல் அல்லது வெப்பநிலை உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க திருப்பி விடப்படுகிறது. இதன் காரணமாக, செரிமான பிரச்சனை ஏற்படுவதுடன், இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. எனவே தான், பண்டைய மருத்துவ முறையில் உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 2 மணி நேரத்திற்குக் குளிக்க வேண்டாம் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Collagen Boosting Herbs: சருமத்தில் இயற்கையாகவே கொலாஜனை அதிகரிக்க இந்த மூலிகை போதும்
Image Source: Freepik