ரொம்ப நேரம் வேலை செஞ்சி கண் ப்ரஷரா இருக்கா? இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
ரொம்ப நேரம் வேலை செஞ்சி கண் ப்ரஷரா இருக்கா? இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க

கிளைகோமா

கிளைகோமா என்பது ஒருவகையான கண் நோயாகும். இதில், கண்ணின் முன்பகுதியில் கூடுதல் திரவம் அதிகரிப்பதால், அழுத்தம் உண்டாகலாம். இது கண் அழுத்த நோய் எனப்படுகிறது. இதனால், கண் பார்வை அளிக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு கண்களில் பாதிப்பை உண்டாக்கலாம். இதில் கிளைகோமா என்ற கண் நோயைக் குணமாக்க உதவும் சில ஆயுர்வேத முறைகளைக் காணலாம்.

கண்களுக்குள் அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாகவும் கிளைகோமா ஏற்படும். இது அழுத்தம் அதிகரிப்பது உள்விழி அழுத்தம் எனப்படுகிறது. இது பார்வை நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கலாம். மேலும் குருட்டுத் தன்மைக்கு முக்கிய காரணம் கிளைகோமா ஆகும். கிளைகோமாவின் முக்கிய அறிகுறிகளாக பார்வை இழப்பு, கண்களில் சோம்பல் தன்மை, கண்களில் வலி, குறுகிய பார்வை போன்றவை ஏற்படலாம்.

திரிபலா

கிளைகோமா பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மூலிகை திரிபலா ஆகும். இது பொதுவாக கண்களை கழுவி சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது கண்களில் உள்விழி அழுத்தத்தைக் குறைத்து பார்வை இழப்பைத் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பார்வை நரம்பு சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair Growth: முடி கொட்டாம அடர்த்தியா வளர செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்க போதும்

மூக்கிரட்டை வேர்

இது கிளைகோமாவுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைகளில் முக்கியமானதாகும். இதில் டையூரிடிக் பண்புகள் நிறைந்துள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களில் இருந்து அதிகப்படியான திரவம் தேங்கும் போது, பார்வை நரம்புகள் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் உள்விழி அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

நெல்லிக்காய்

கிளைகோமாவைக் கட்டுப்படுத்த மற்றும் சிகிச்சையளிக்க உதவும் சிறந்த மூலிகைகளில் ஒன்று நெல்லிக்காய் ஆகும். இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்களே காரணமாகும். மேலும் இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கண் திசுக்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் கண் விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளை பாதுகாக்கிறது.

கிளைகோமாவுக்கான வாழ்க்கை முறை மாற்றங்கள்

கிளைகோமா பிரச்சனையிலிருந்து விடுபட வைட்டமின்கள் நிறைந்த ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்பது அவசியமாகும். மேலும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இது தவிர உடலில் நீரிழப்பு உண்டாகாமல் இருக்க தேங்காய், மோர், பழச்சாறுகள் போன்ற போதுமான திரவங்களை அருந்தலாம். மேலும் கண்களில் அழுத்தத்தைக் குறைக்க தலையை உயர்த்தி வைக்கலாம்.

மேலே கூறப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை முறைகளுடன், வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வது சிறந்த நன்மைகளைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Blood Flow During Periods: மாதவிடாய் சமயத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க பாலுடன் இந்த 4 பொருள்களைச் சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Toothache Ayurvedic Remedies: பல் வலிக்கு சூப்பரான ஆயுர்வேத வைத்தியம் இங்கே.!

Disclaimer