Hair Washing Side Effects: தினமும் தலைக்குக் குளிப்பவர்களா நீங்க? அப்ப கண்டிப்பா இத பாருங்க

  • SHARE
  • FOLLOW
Hair Washing Side Effects: தினமும் தலைக்குக் குளிப்பவர்களா நீங்க? அப்ப கண்டிப்பா இத பாருங்க

இந்த சூழ்நிலையில் ஷாம்புவை வழக்கமாக பயன்படுத்துவது, முடியின் பிரகாசத்தை இழக்கச் செய்கிறது. வழக்கமான முடி கழுவுதல் பிரச்சனையால் உச்சந்தலையில் சேதம் மற்றும் முடி சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும் பல ஆண்கள், பெண்கள் தலைமுடியைக் கழுவுவதுடன் கண்டிஷனரை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவும் முடியில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் விளைவுகள் மோசமாகி முடி உயிரற்றதாக மாறிவிடலாம். இதில் தினமும் தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water For Hair: தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் தண்ணீரும் தலைமுடிக்கும் நல்லது. எப்படி தெரியுமா?

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் விளைவுகள்

தினந்தோறும் தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவது முடியின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதில் அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து காணலாம்.

முடி பிரகாசத்தை இழப்பது

தினமும் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுவதால், கூந்தல் பொலிவை இழந்து மிகவும் வறண்டு போகலாம். தினமும் ஷாம்பு பயன்படுத்துவது முடியில் இருக்கும் சத்துக்களை இழக்கிறது. இதனால் முடியின் இயற்கையான பிரகாசம் குறைகிறது.

உச்சந்தலை வறண்டு போகுதல்

தினமும் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தி அலசுவது வறண்ட ஸ்கால் பிரச்சனையை உண்டாக்கலாம். உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் தினமும் தலைமுடியைக் கழுவுவது உச்சந்தலையின் ஈரப்பதத்தை நீக்குகிறது. மேலும் இது தலையில் அரிப்பு பிரச்சனையையும் அதிகரிக்கும்.

பொடுகு பிரச்சனை நீங்க

தினமும் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது பொடுகு பிரச்சனையை அதிகரிக்கிறது. இதனால் கூந்தலில் அரிப்பு மற்றும் சொறி ஏற்படவும் வாய்ப்பு அதிகரிக்கலாம். தினந்தோறும் ஷாம்பு போடுவது கூந்தலை வறட்சியடையச் செய்வதுடன், பொடுகு அதிகரிக்க காரணமாகிறது. மேலும் இது முடி உதிர்வையும் ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Leaves For Hair Fall: முடி உதிர்வு பிரச்சனையை ஈஸியா தடுக்க இந்த இலைகளைப் பயன்படுத்துங்க.

முடி பிளவு பிரச்சனைக்கு

ஷாம்பு தயாரிப்பில் பல வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தினமும் முடிக்கு ஷாம்பு போடுவது கூந்தலை உயிரற்றதாக மாற்றுவதுடன், பிளவு முனை பிரச்சனையை அதிகரிக்கிறது. தினமும் ஷாம்பு போடுவது முடி பிளவை ஏற்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை பாதிக்கிறது.

முடி உதிர்வு பிரச்சனைக்கு

முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருபவர்கள், தினமும் ஷாம்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தினமும் ஷாம்பு போடுவது முடி உதிர்வை அதிகரித்து, முடியை சேதப்படுத்துகிறது. முடியை சேதப்படுத்துவதுடன் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.

தலைமுடியை வாரத்திற்கு எத்தனை முறை கழுவலாம்?

தினமும் முடியை அலசுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டோம். எனவே ஒவ்வொரு இரண்டு முதல் மூன்றாவது நாளில் முடியைக் கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முடி பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Aloevera For Dandruff: தீராத பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட கற்றாழையுடன் இந்த பொருள் சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Hair Fall Food: உங்களுக்கு அதிகமா முடி கொட்டுதா? இந்த உணவுகள் தான் காரணம்!

Disclaimer