Leaves For Hair Fall: முடி உதிர்வு பிரச்சனையை ஈஸியா தடுக்க இந்த இலைகளைப் பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
Leaves For Hair Fall: முடி உதிர்வு பிரச்சனையை ஈஸியா தடுக்க இந்த இலைகளைப் பயன்படுத்துங்க.

முடி உதிர்வைத் தடுக்க சில இலைகளைப் பயன்படுத்தலாம். இவை நீண்ட காலமாக முடி பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள சில அத்தியாவசிய பண்புகள், முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இதில் முடி உதிர்வைக் குறைத்து, முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் சில இலைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்

முடி உதிர்வைத் தடுக்க உதவும் இலைகள்

கீழே கொடுக்கப்பட்ட இலைகளைப் பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையைக் குறைக்கலாம்.

ரோஜா இதழ்கள்

ரோஜா இதழ்களைப் பயன்படுத்தி உச்சந்தலையில் ஈர்பபதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், உச்சந்தலை அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. ரோஜாவில் அஸ்ட்ரிஜென்ட் என்ற கலவை நிறைந்துள்ளது. இவை உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெய் வெளியேறுவதைத் தடுக்க உதவுகிறது.

ரோஜா இதழ்களை பேஸ்ட்டாக செய்து தலையில் தடவலாம். இது தவிர, முடிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயில் சேர்த்து பயன்படுத்தலாம்.

கொய்யா இலைகள்

இதில் முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. மேலும், உச்சந்தலையில் புரதத்தை உற்பத்தி செய்து முடியை வலுவாக வைக்க உதவுகிறது.

கொய்யா இலை ஊறவைத்த நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவலாம். மேலும், கொய்யா இலைகளை பொடி செய்து அதனைத் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

செம்பருத்தி இலைகள்

இது அதிக ஈரப்பதம் நிறைந்த இலைகளாகும். இவை உச்சந்தலையில் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. இது முடியை வலிமையாக வைத்திருப்பதுடன், முடி உதிர்வைக் குறைக்கிறது.

செம்பருத்தியை தயிர் போன்ற பல்வேறு பொருள்களுடன் சேர்த்து ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். செம்பருத்தி இலையைச் சாறாக பிழிந்து, அதை முடியின் எண்ணெயில் கலந்து தடவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Loss Diabetes: சர்க்கரை நோயினால் முடி உதிர்வு பிரச்சனையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

வேப்ப இலைகள்

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட வேப்ப இலைகள் முடி ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் செப்டிக் பண்புகள் உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. வேப்ப இலைகள் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது.

வேப்ப இலைகளைப் பொடியாக செய்து தலைமுடியில் தடவலாம். இது தவிர, வேப்ப இலைகளை வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவலாம்.

கறிவேப்பிலை

இதில் வைட்டமின் பி, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையில் ஊட்டமளிப்பதுடன், முடி உதிர்வைத் தடுக்கிறது. இதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை காணப்படுகின்றன. இதனைப் பயன்படுத்துவது கூந்தலுக்கு பளபளப்பைத் தருவதுடன், வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கறிவேப்பிலை எண்ணெயைத் தயார் செய்து கூந்தலில் தடவலாம். இது தவிர, ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம் மற்றும் ஷாம்புவில் பேஸ்ட்டைக் கலந்து பயன்படுத்தலாம்.

இந்த இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும், இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பல்வேறு தொற்றுக்கள் மற்றும் பொடுகு பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தர உதவுகிறது. எனினும், உச்சந்தலையில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், இந்த இலைகளைப் பயன்படுத்துவதற்கு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water For Hair: தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் தண்ணீரும் தலைமுடிக்கும் நல்லது. எப்படி தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Apple Cider Vinegar for Hair: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த்துபவரா நீங்க? இதன் தீமைகள் இங்கே!

Disclaimer