Apple Cider Vinegar for Hair: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த்துபவரா நீங்க? இதன் தீமைகள் இங்கே!

  • SHARE
  • FOLLOW
Apple Cider Vinegar for Hair: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த்துபவரா நீங்க? இதன் தீமைகள் இங்கே!

சில நாட்களுக்கு உங்கள் முடி அழகாக தெரிந்தாலும், முடி மீண்டும் சேதமடையத் தொடங்கும். நம்மில் பலர் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து வீட்டு வைத்தியங்களை முயற்சிப்போம். குறிப்பாக, ஆப்பிள் சைடர் வினிகரை முடியில் பயன்படுத்துவது. ஆனால், ஆப்பிள் சைடர் வினிகரை ஒருபோதும் கூந்தலில் பயன்படுத்தக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏன் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Curry Leaves For Hair: முடி வளர்ச்சியில் கறிவேப்பிலையின் பங்கு.!

முடிக்கு ஏன் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த கூடாது?

கூந்தல் வறட்சி

ஆப்பிள் சீடர் வினிகரை உங்கள் தலைமுடியில் அதிக அளவில் பயன்படுத்தினால், அது உங்கள் தலைமுடியை சிறிது நேரத்திலேயே வறட்சியாக்கும். ஏனென்றால், இதைத் தடவினால், தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் வெளியேறி, முடிக்கு ஈரப்பதம் கிடைக்காது. எனவே, அதை பயன்படுத்துவதை தடுப்பது நல்லது. வறண்ட முடி உள்ளவர்கள் இதை பயன்படுத்தவே கூடாது.

முடி உதிர்வு அதிகரிக்கும்

நாம் அடிக்கடி நம் தலைமுடியில் இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்துவதால், முடி உத்திர துவங்கும். ஆப்பிள் சைடர் வினிகர் கூந்தலில் பயன்படுத்தக்கூடாத பொருட்களில் ஒன்றாகும். இதில் உள்ள ஆசிட் முடியை சேதப்படுத்தி முடி உதிர்வை அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Loss Diabetes: சர்க்கரை நோயினால் முடி உதிர்வு பிரச்சனையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

முடி நிறம் மங்கும்

இதை நேரடியாக உங்கள் தலைமுடியில் பயன்படுத்தினால், முடியின் நிறம் மங்கிவிடும். இதில் அதிக அளவு அமிலம் இருப்பதால் முடியின் நிறம் மங்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவை வெண்மையாக மாற ஆரம்பிக்கும். எனவே, உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க இதைப் பயன்படுத்த வேண்டாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Hair Loss Diabetes: சர்க்கரை நோயினால் முடி உதிர்வு பிரச்சனையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Disclaimer