Change in Weather and Hair Growth: இந்தியாவின் பல பகுதிகளில் குளிர்காலம் துவங்கிவிட்டது. இந்த சீசனில் பலருக்கும் அடிக்கடி முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். ஆண்டின் மற்ற காலங்களை விட இந்த நேரத்தில் நம் தலைமுடி அதிகமாக வறண்டு காணப்படும். ஆனால், நம்மில் பலருக்கு “குளிர்காலத்தில் முடி வளர்ச்சி பாதிக்கப்படுமா?” என்ற கேள்வி மனதில் எழுந்திருக்கும்.
இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, லக்னோவில் உள்ள ஓம் ஸ்கின் கிளினிக், மூத்த தோல் மருத்துவ நிபுணர், டாக்டர் தேவேஷ் மிஸ்ராவிடம் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் இங்கே.
இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!
மாறிவரும் வானிலை முடி வளர்ச்சியை பாதிக்குமா?

வானிலை மாறும் போது, முடியில் வறட்சி தோன்றுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். கூந்தலில் ஈரப்பதம் இல்லாததால் முடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வானிலை நேரடியாக முடியை பாதிக்காது என்று டாக்டர் தேவேஷ் மிஸ்ரா கூறினார். ஆனால் உங்களின் ஒரு சில கெட்ட பழக்கங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம்.
குளிர் நாகாலத்தில் பெரும்பாலும் தண்ணீர் அருந்துவதை குறைக்கிறோம். இந்த சீசனில் முடியை பராமரிக்காததால், முடி வறண்டு, உடையும். மாறிவரும் வானிலை நம் தலைமுடியை பாதிக்கிறது என்பது நமது தவறான கருத்து. உண்மை என்னவென்றால், வானிலை மாற்றத்தின் போது நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், அது உங்கள் தோல், முடி மற்றும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? உங்களுக்கான 6 ஆசனங்கள் இங்கே…
வானிலை மாறும்போது தலைமுடியை எவ்வாறு கவனிப்பது?

- ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள், புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளுங்கள். தண்ணீர் பற்றாக்குறையால் முடி ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
- முடி ஆரோக்கியமாக இருக்க வாரம் ஒருமுறை எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.
- முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டால், உச்சந்தலையை நன்கு சுத்தம் செய்யவும். அழுக்கான உச்சந்தலையால் முடி வளர்ச்சி நின்றுவிடும்.
இந்த பதிவும் உதவலாம் : அடர்த்தியான முடியை கட்டுப்படுத்த சில வழிகள்!
இந்த கெட்ட பழக்கங்களை தவிர்க்கவும்

- முடியை எப்போதும் திறந்து வைக்கக் கூடாது. இதன் காரணமாக முடி அதிகமாக வறண்டு போகும்.
- குளிர்ந்த காலநிலையில் வெந்நீரில் முடியைக் கழுவ வேண்டாம், அது முடி உதிர்வை ஏற்படுத்தும்.
- குளிர்ந்த காலநிலையில் முடியை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையரை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
- இந்தத் தகவல் உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். இந்த கட்டுரையைப் பகிர மறக்காதீர்கள்.
study source: National Center for Biotechnology Information