Ways To Use Fennel Seeds For Reduce Hair Fall: போதுமான ஊட்டச்சத்து மற்றும் கவனிப்பு இல்லாததன் காரணமாக முடி அதிகம் உதிர்வதை உணரலாம். சில நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள், மரபணு சிகிச்சைகள் அல்லது வானிலை மாற்றங்களில் கூட முடி உதிர்வை ஏற்படுத்தலாம். இதைத் தடுக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இதற்கு விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருள்கள் மற்றும் சிகிச்சைகளை முயற்சி செய்வர். ஆனால், இதிலுள்ள இரசாயனங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதற்கு வீட்டிலேயே எளிமையான மற்றும் இயற்கை வைத்தியங்களைக் கையாளலாம். அந்த வகையில் முடி உதிர்வடைவதைத் தடுக்க கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tea For Hair: பொசு பொசுனு முடி வளர உதவும் டீ வகைகள். எப்படி பயன்படுத்துவது?
முடி உதிர்வைக் குறைக்க சீரகம் பயன்படுத்தும் முறை
சீரக நீரில் முடியை கழுவுதல்
சீரக நீரைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவுவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை முடியின் ஆழமாக வேர்களை வலுப்படுத்தி, உச்சந்தலை ஈரப்பதத்தை பராமரிக்கிறது. இந்த முறை வாரம் இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் 3 முதல் 4 ஸ்பூன் பெருஞ்சீரகத்தைத் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை குளிர்வித்து தலைமுடியைக் கழுவ வேண்டும். மற்றொரு வழியாக ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம்.
சீரக விதை ஹேர் மாஸ்க்
தலைமுடிக்கு சீரக விதை ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு இரு முறை தடவலாம். இந்த ஹேர் மாஸ்க் செய்ய பெருஞ்சீரகத்தை முந்தைய நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் இந்த பேஸ்ட்டைத் தயார் செய்ய வேண்டும். மேலும் இதில் தயிர் கலந்து ஹேர் மாஸ்க் அப்ளை செய்யலாம். இதை குறைந்த பட்சம் அரை மணி நேரம் வைக்க வேண்டும். இது முடிக்கு ஈரப்பதத்தை அளித்து முடி உதிர்வைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Banana Hair Mask: சுருள் முடிபிரச்சனைக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க
தினசரி உணவில் சேர்ப்பது
முடி உதிர்வைத் தடுக்க, அன்றாட உணவில் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவு சீரகத்தை உட்கொள்ளலாம். இது தவிர, காலை பானமாகவோ அல்லது உணவுக்குப் பிறகு மௌத் ஃப்ரஷ்னராகவோ சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
சீரக எண்ணெய் பயன்பாடு
சாதாரண முடி எண்ணெய்க்குப் பதிலாக சீரக எண்ணெய் பயன்படுத்துவது கூடுதல் நன்மையைத் தருகிறது. இதற்கு ஏதேனும் அடிப்படை எண்ணெயில் ஊறவைத்த பெருஞ்சீரகத்தை சூடாக்கலாம். அதன் படி ஷாம்பு பயன்படுத்தும் இரண்டு மணி நேரத்திற்கு முன் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். அதன் பிறகு தலைமுடியை நன்றாக கழுவலாம்.
இரண்டு மாதங்களுக்கு முடி உதிர்தல் இருப்பின், மருத்துவரை அணுகுவது நல்லது. உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத காரணத்தினால் ஏற்படும் முடி உதிர்வை சீரகத்தைப் பயன்படுத்தி குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dry Hair Remedies: முடி ரொம்ப வறண்டு போயிருக்கா? இந்த 3 பொருள்களை 3 வழிகளில் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik