Coconut Water For Hair: தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் தண்ணீரும் தலைமுடிக்கும் நல்லது. எப்படி தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Coconut Water For Hair: தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் தண்ணீரும் தலைமுடிக்கும் நல்லது. எப்படி தெரியுமா?

அந்த வகையில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், தேங்காய் நீரும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். பல்வேறு தலைமுடி பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வகையில் தேங்காய் நீர் உள்ளது. எனவே வழக்கமான தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் தேங்காய் நீரை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்

தேங்காய் நீர்

தேங்காய் நீர் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அது ஒரு சுவையான மற்றும் சத்தான பானமாகும். இதில் பல்வேறு முக்கிய தாதுக்கள், இயற்கை சர்க்கரைகள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை உள்ளன. இவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் முதுமை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

தலைமுடிக்கு தேங்காய் நீரில் நன்மைகள்

தலைமுடியை ஈரப்பதமாக்க

தேங்காய் நீரில் லாரிக் அமிலம் நுண்ணுயிர் எதிர்ப்பு கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. இது வறண்ட உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுகிறது. இவை எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்களால் ஆனது. மேலும் இதில் சோடியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது. இது முடி மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

முடியை பலப்படுத்த

தேங்காய் நீரானது உச்சந்தலையைத் தூண்டி செல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இவை முடியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இதன் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் முடி இழைகளை பலப்படுத்துவதுடன், முடிக்கு அடர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது.

முடி உதிர்வைக் குறைக்க

இதன் பல்வேறு பண்புகள் உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இவை முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்துவதன் மூலம் முடி உதிர்வைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hemp Seed Oil For Hair: முடி நீளமா, மென்மையா, அடர்த்தியா வளர சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகள்

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க

ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் ஈரப்பதமான முடி போன்றவற்றின் மூலம் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு தலைமுடியைக் கழுவ தேங்காய் தண்ணீரைப் பயன்படுத்தலாம். இவை மயிர்க்கால்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் முடியின் வேர் முதல் நுனி வரை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

முடி பிளவு முனைகளைத் தவிர்க்க

தேங்காய் நீர் தலைமுடியை ஊட்டமளிக்க உதவுகிறது. இதன் மூலம் முடி உதிர்தல் மற்றும் முடி பிளவு முனைகளைத் தவிர்த்து முடி மென்மையாக இருக்க உதவுகிறது. தேங்காய் நீர் தலைமுடியை லேசான வைக்க உதவுகிறது.

வறண்ட உச்சந்தலையை அகற்ற

தேங்காய் நீரானது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பிலிருந்து விடுபட உதவுகிறது. இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது. தேங்காய் நீரில் உள்ள அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சேதமடைந்த முடியை மீட்டெடுக்க உதவுகிறது.

அந்த வகையில் தேங்காய் நீரைப் பயன்படுத்துவது முடி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Egg Hair Mask: தலைக்கு முட்டை ஹேர் மாஸ்க் யூஸ் பண்ண போறீங்களா? இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

முடி ஆரோக்கியமாக வளர வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்க!

Disclaimer