Hemp Seed Oil For Hair: முடி நீளமா, மென்மையா, அடர்த்தியா வளர சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகள்

  • SHARE
  • FOLLOW
Hemp Seed Oil For Hair: முடி நீளமா, மென்மையா, அடர்த்தியா வளர சணல் விதை எண்ணெய் தரும் நன்மைகள்

இந்த பிரச்சனையைத் தவிர்க்க, சணல் விதைகளில் செய்யப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு சணல் விதைகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களே காரணமாகும். இது முடியின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இதில் முடி வளர்ச்சிக்கு சணல் விதை தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil For Hair: கரு கரு முடிக்கு கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருள்களை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க.

முடி வளர்ச்சிக்கு சணல் விதையின் நன்மைகள்

முடி வளர்ச்சியை மேம்படுத்த சணல் விதை தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

சணல் விதை எண்ணெயில் ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் முடி உடைவதைக் குறைப்பதற்கும், முடியின் வலிமையைப் பேணுவதற்கும் உதவுகிறது. கூடுதலாக, சணல் விதை எண்ணெயில் துத்தநாகம் மற்றும் இரும்பு உள்ளிட்ட புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது சேதமடைந்த முடியை சரி செய்வதுடன், முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

முடி வளர்ச்சிக்கு

சணல் விதை எண்ணெயில் காமா லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இந்த எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதுடன், முடி முன்பை விட வேகமாக வளர வைக்கிறது.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

சணல் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சணல் விதை எண்ணெய் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை பொடுகு, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், மயிர்க்கால்களின் பிரச்சனைகளை நீக்குவதுடன், குளிர்காலத்தில் உச்சந்தலையில் ஏற்படும் முடி வறட்சி பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Grapeseed Oil Benefits: கொத்து கொத்தா முடி கொட்டுதா? திராட்சை எண்ணெய் ட்ரை பண்ணுங்க..

முடி ஈரப்பதமாக்க

சணல் விதை எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இந்த எண்ணெயைத் தடவுவது முடிக்கு ஆழமான ஊட்டச்சத்தை வழங்குவதுடன், முடி வறட்சியை நீக்குகிறது. இதனுடன் முடி முனை பிளவு பிரச்சனையைக் குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

சணல் விதை எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி

முடி வளர்ச்சிக்கு சணல் விதை எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்துக் காணலாம்.

  • முதலில் கடாய் ஒன்றில் சுமார் நான்கு தேக்கரண்டி அளவு சணல் விதை எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு சுமார் 5 முதல் 6 கறிவேப்பிலை மற்றும் கால் ஸ்பூன் அளவு வெந்தயத்தைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • எண்ணெயைச் சூடாக்கிய பிறகு அடுப்பை அணைத்து, பின் தயாரிக்கப்பட்ட எண்ணெயை வடிகட்டி பாட்டில் ஒன்றில் சேர்க்கவும்.
  • இந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் இந்த எண்ணெயைக் கொண்டு தலையை மசாஜ் செய்து கொள்ளலாம்.

சணல் விதை எண்ணெயைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இந்த எண்ணெயைக் கொண்டு தலையை மசாஜ் செய்வது முடிக்கு ஊட்டச்சத்துக்களை எளிதாக வழங்குவதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடியை வலுவாக்கி, முடி வளர்ச்சியை ஆதரவாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்

Image Source: Freepik

Read Next

Homemade Hair Mask: முடி அதிகமா உதிருதா? இந்த ஹேர்பேக்குகள் யூஸ் பண்ணுங்க

Disclaimer