Mango Leaves For Hair: முடி நீளமா, அடர்த்தியா வளரணும்னா மா இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Mango Leaves For Hair: முடி நீளமா, அடர்த்தியா வளரணும்னா மா இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க

இன்று பலரும் முடி சார்ந்த பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர். இதில் முடி உதிர்வு பொதுவான பிரச்சனையாகும். முடி உதிர்வு ஏற்பட்டால், அந்த இடத்தில் முடி மெதுவாக வளர ஆரம்பிக்கும். இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக மா இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இதில், மா இலைகள் தலைமுடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds For Hair Growth: பொசு பொசுனு அடர்த்தியா முடி வளர இந்த 6 விதைகள் போதும்

முடி வளர்ச்சியில் மாம்பழ இலைகளின் பங்கு

மா இலைகள் பல்வேறு சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்ட உதவுகிறது. மேலும், உச்சந்தலையிலிருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் இறந்த சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இவை முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, பலமாக வைக்க உதவுகிறது. முடி உதிர்வைத் தடுத்து, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது தவிர பல்வேறு முடி பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தருகிறது.

முடி ஆரோக்கியத்தில் மாம்பழ இலைகள்

  • முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது
  • இது முடிக்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது
  • முடிக்கு மாம்பழ இலைகள் பயன்படுத்துவது முடியை அடர்த்தியாக வைக்க உதவுகிறது
  • இவை உச்சந்தலையில் உள்ள பூஞ்சையை நீக்கி, ஒவ்வாமை பிரச்சனையை குணப்படுத்துகிறது
  • முடி பிளவு பிரச்சனையைத் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Shikakai Hair Mask: இந்த ஒரு ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க, முடி பிரச்சனை எல்லாம் காணாம போய்டும்

முடி வளர மா இலை பயன்படுத்தும் முறை

  • இதற்கு முதலில் 4 முதல் 5 மா இலைகளை நன்றாகக் கழுவ வேண்டும். பின் இதை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • இப்போது இந்த பேஸ்ட் உடன் 1 ஸ்பூன் தயிர், முல்தானி மிட்டி மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும்.
  • பின், இந்த பேஸ்ட்டை முடியில் தடவி 30 நிமிடங்கள் வைத்து பிறகு தலைமுடியைக் கழுவ வேண்டும்.
  • இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தடவலாம்.

மா இலை நீரில் முடியை அலசுதல்

குளித்த தண்ணீரில் 7-8 மா இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை குளிர்வித்து, தலைமுடியைக் கழுவ வேண்டும். மா இலை நீரில் முடியைக் கழுவுவது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இவ்வாறு மா இலைகளை தலைமுடிக்கு பயன்படுத்துவது சிறந்த நன்மைகளைத் தருகிறது. முடி வளர்ச்சியை வேகமாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்! என்னென்ன சாப்பிடலாம்?

Image Source: Freepik

Read Next

Beetroot Peel For Hair: பொடுகு தொல்லையிலிருந்து விடுபட பீட்ரூட் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க

Disclaimer