முடி வளர்ச்சி முதல் பொடுகு குறைப்பு வரை.. வலுவான முடி ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க

How to use tulsi for hair growth and thickness: தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பல்வேறு ஆரோக்கியமான இலைகள் உதவுகிறது. அதன் படி, முடி ஆரோக்கியத்திற்கு துளசி இலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளுக்கும் துளசி இலைகள் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
முடி வளர்ச்சி முதல் பொடுகு குறைப்பு வரை.. வலுவான முடி ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க


Ways to use tulsi for hair growth: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் முடி உதிர்வு, முடி உடைதல், முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகளைப் பலரும் சந்திக்கின்றனர். இதற்கு சிலர் வெளியில் கிடைக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால், சில சமயங்களில் இதில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம் என்றும், அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், சில இயற்கையான முடி பராமரிப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம். அவ்வாறு, துளசி தலைமுடிக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. துளசி செடியானது புனிதமான மற்றும் குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டுள்ளது. இது கூந்தல் பராமரிப்பு வழக்கத்தை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. கூந்தல் பராமரிப்பு முறைக்கு துளசி ஒரு சிறந்த தேர்வாகும். துளசி செடியின் இலைகளை பல்வேறு முடி பராமரிப்புப் பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்துவது முடி உதிர்தலை நிறுத்தவும், முடி வேர்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு துளசியைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Onion hair mask: முடி அடர்த்தியா, பொசுபொசுனு வளர வெங்காயத்தை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க

முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு துளசியை பயன்படுத்துவது எப்படி?

முடி வளர்ச்சிக்கு - துளசி மற்றும் வெங்காயச் சாறு மாஸ்க்

வெங்காயத்தில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் முடி வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்ய, 10-20 துளசி இலைகளை எடுத்து, ஒரு தேக்கரண்டி புதிய வெங்காயச் சாற்றைச் சேர்த்து ஒரு தடிமனான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பிறகு இதை வழுக்கைத் திட்டுகளில் தடவலாம். மெல்லிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி, 30 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம். பின்னர், தலைமுடியை லேசான ஷாம்பூ கொண்டு கழுவி விடலாம். இந்த செயல்முறையை 2-3 மாதங்கள் செய்வதன் மூலம் மாற்றத்தைக் காணலாம். வெங்காயச் சாற்றில் உள்ள கந்தகம் துளசியின் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் இணைந்து முடி மீண்டும் வளரவும், முடி உதிர்தல் பிரச்சனையைக் குறைக்கவும் உதவுகிறது.

முடியை வலுவாக்க - துளசி மற்றும் வெந்தய ஹேர் மாஸ்க்

துளசி மற்றும் வெந்தயம் இரண்டுமே தலைமுடியை வலுவாக்க உதவுகிறது. இவை முடி இழைகளை வலுப்படுத்தவும், முடி உதிர்தல் பிரச்சினைகளைக் குறைக்கவும் வழிவகுக்கிறது. இந்த கலவை தயார் செய்ய, இரண்டு தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சிறிது துளசி இலைகளுடன் அரைத்து, பின்னர், ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கலாம். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் வைத்து, பிறகு லேசான ஷாம்பூ கொண்டு கூந்தலைக் கழுவி விடலாம்.

உச்சந்தலை அரிப்பு நீங்க - துளசி மற்றும் வேம்பு ஹேர் மாஸ்க்

துளசி மற்றும் வேப்பிலையில் நிறைந்துள்ள பண்புகள் பாக்டீரியா, பூஞ்சை, சிவத்தல் அல்லது அரிப்பு போன்றவற்றிலிருந்து தலைமுடியைப் பாதுகாக்கவும், பொடுகைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு துளசி மற்றும் வேப்பிலைகளை ஒரு பேஸ்ட் போல தயாரித்து, அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பிறகு இதை உச்சந்தலையில் கவனமாக தடவி 5 நிமிடங்கள் தேய்க்கலாம். இதை மற்றொரு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு எப்போதும் புதிய துளசி மற்றும் வேப்பிலைகளை எடுத்து, வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dandruff home remedies: தீராத பொடுகுத் தொல்லையால் அவதியா? இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த - துளசி மற்றும் அரிசி மாவு கலவை

எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையை கட்டுப்படுத்துவதில் இந்த கலவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், உச்சந்தலையில் படிவதை நீக்கவும் உதவுகிறது. இதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான துளசிப் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி அரிசி மாவுடன், இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டரைக் கலக்க வேண்டும். பிறகு, இந்த பேஸ்டாக மாற்றி, அதை உச்சந்தலையில் 5 நிமிடங்கள் தடவலாம். இதை 15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு தலைமுடியை தண்ணீரில் கழுவி விடலாம். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரு முறை பின்பற்ற வேண்டும்.

பொடுகை கட்டுப்படுத்த - துளசி மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்

உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகைப் போக்க விரும்புபவர்களுக்கு கற்றாழை, துளசி கலவை உதவும். இதற்கு 10-15 துளசி இலைகளை நசுக்கி, ஒரு தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மெல்லிய, எளிதில் தயாரிக்கக்கூடிய பேஸ்ட்டை உச்சந்தலையில் சமமாக தடவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவி விடலாம். மென்மையான விளைவைப் பெற கண்டிஷனரைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை உச்சந்தலையை சுத்தமாக்கி, பளபளப்பான முடி இழைகளைப் பெற வழிவகுக்கிறது.

இது போன்ற வழிகளில் துளசியைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Tulsi For Hair: கரு கருன்னு அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? துளசியை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

பொசுபொசுனு முடி அடர்த்தியா வேணுமா? வீட்டிலேயே தயாரித்த இந்த சீரம் யூஸ் பண்ணுங்க

Disclaimer