$
Benefits of Tulsi for Skin and Hair: நம் தலைமுடி நீளமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். இதற்காக சந்தைகளில் விற்கப்படும் எண்ணெய்கள் மற்றும் பார்லருக்கு சென்று சிகிச்சைகளை எடுப்போம். வாழ்க்கை முறை மற்றும் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் நமது தலைமுடி பெரும்பாலும் கலையிழந்து காணப்படும்.
உங்கள் கூந்தல் எப்போதும் அழகாக இருக்க முடி ஆரோக்கியத்திற்கு துளசி இலைகளை பயன்படுத்தலாம். துளசி இலைகளை கூந்தலில் எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
முடி ஆரோக்கியமாக இருக்க என்னென்ன பொருட்கள் பயன்படுத்த வேண்டும்?

- துளசி இலைகள்
- தயிர்
தலைமுடிக்கு தயிர் தடவினால் என்ன ஆகும்?
- தயிரில் உள்ள புரதம், துத்தநாகம், கால்சியம் போன்ற பொருட்கள் முடிக்கு ஊட்டமளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- உச்சந்தலையில் இருக்கும் எந்த வித அழுக்குகளையும் சுத்தம் செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
துளசி இலைகளை கூந்தலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
- துளசி இலைகள் உச்சந்தலையில் இருந்து முடி நீளம் வரை ஏற்படும் முடி தொற்றுகளில் இருந்து தலை முடியை பாதுகாக்கிறது.
- இது கலையிழந்த கூந்தலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கும் வகையில் செயல்படுகிறது.
கூந்தலுக்கு துளசி மற்றும் தயிரை எப்படி பயன்படுத்துவது?

- முதலில் முடியின் நீளத்திற்கு ஏற்ப துளசி இலைகள் மற்றும் கால் டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
- அதன் பிறகு, அவற்றை வடிகட்டி, அதை நன்றாக ஆற வைக்கவும்.
- இப்போது துளசி இலைகளை மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
- தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப அதில் தயிர் கலந்து கொள்ளவும்.
- இவை இரண்டையும் நன்கு கலந்த பிறகு, இந்த ஹேர் பேக்கை உங்கள் தலைமுடிக்கு தடவவும்.
- இந்த பேக்கை தலைமுடியில் சுமார் 1 மணி நேரம் அப்படியே விடவும்.
- இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் ஷாம்பு உதவியுடன் முடியைக் சுத்தம் செய்யவும்.
இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு 2 முறை வரை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.
Image Credit: freepik
Disclaimer