Amla Shikakai Hair Mask: இந்த ஒரு ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க, முடி பிரச்சனை எல்லாம் காணாம போய்டும்

  • SHARE
  • FOLLOW
Amla Shikakai Hair Mask: இந்த ஒரு ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க, முடி பிரச்சனை எல்லாம் காணாம போய்டும்

இந்த சூழ்நிலையில் இயற்கையான முறையைத் தழுவுவது மிகுந்த நன்மை பயக்கும். அந்த வகையில் ஆம்லா, ரீத்தா, சீயக்காய் இவை மூன்றும் கலந்த கலவை முடி ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில், ஆம்லா ரீத்தா சீயக்காய் ஹேர் மாஸ்க் தயாரிப்பு குறித்து காணலாம். இது பல்வேறு முடி பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Seeds For Hair Growth: பொசு பொசுனு அடர்த்தியா முடி வளர இந்த 6 விதைகள் போதும்

முடிக்கு ஆம்லா ரீத்தா சீயக்காய் தரும் நன்மைகள்

ஆம்லா, சீயக்காயில் உள்ள பல்வேறு ஆரோக்கிய பண்புகள் முடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இந்த மூன்று பொருள்களிலும் பொடுகைக் ட்டுப்படுத்தும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. மேலும், இவை கூந்தலில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதுடன், பளபளப்பையும் தருகிறது.

ஆம்லா ரீத்தா சீயக்காய் பவுடர் ஹேர் மாஸ்க்

இந்த மூன்று பொருள்களையும் கொண்டு தயார் செய்யப்படும் ஹேர் மாஸ்க் ஆனது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் பல்வேறு முடி பிரச்சனைக்கு ஆம்லா ரீத்தா சீயக்காய் ஹேர் மாஸ்க்கை எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து காணலாம்.

நரைமுடி பிரச்சனைக்கு ஹேர் மாஸ்க்

இன்றைய நவீன காலகட்டத்தில் பலருக்கும் இளமையிலேயே முடி நரைத்து விடுகிறது. இந்த சூழ்நிலையில், ஆம்லா ரீத்தா சீயக்காய் ஹேர் மாஸ்க் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

  • ஆம்லா ரீத்தா சீயக்காய் பவுடர் - தலா 2 ஸ்பூன்
  • மருதாணி தூள் - 4 ஸ்பூன்

இந்த இரண்டு பொருள்களையும் கலந்து பேஸ்ட்டாக தயார் செய்து தலைமுடியில் தடவி சுமார் 1 மணி நேரம் வைக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Oil: கொத்து கொத்தா முடி வளர எந்த எண்ணெய் பெஸ்ட் தெரியுமா?

பொடுகு நீங்க ஹேர் மாஸ்க்

பொடுகு அல்லது தலையில் அரிப்பு பிரச்சனை இருப்பின், இதற்கு ஆம்லா ரீத்தா சீயக்காய் ஹேர் மாஸ்க் சிறந்த தீர்வாக அமைகிறது.

  • நெல்லிக்காய் சாறு - 4 டீஸ்பூன்
  • சீயக்காய் பொடி - 2 ஸ்பூன்
  • ரீத்தா பவுடர் - 2 ஸ்பூன்

இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்ய முதலில் ஒரு கிண்ணத்தில் 4 டீஸ்பூன் ஆம்லா சாற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 2 ஸ்பூன் சீகைக்காய் பொடி மற்றும் 2 ஸ்பூன் ரீத்தா தூள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதை பேஸ்ட்டாக தயார் செய்து தலைமுடியில் தடவி 30 முதல் 35 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு, பின்னர் கழுவி விடலாம்.

முடி உதிர்வுக்கான ஹேர் மாஸ்க்

ஆம்லா ரீத்தா சீயக்காயில் நிறைந்துள்ள பல்வேறு மருத்துவ பண்புகள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் ஆம்லா ரீத்தா சீயக்காய் ஹேர் மாஸ்க்கை முடி உதிர்வுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.

  • ஆம்லா ரீத்தா சீயக்காய் பவுடர் - 1 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
  • கற்பூரம் - 1/2 டீஸ்பூன்

முதலில் கொடுக்கப்பட்ட அளவு ஆம்லா ரீத்தா சீயக்காய் பவுடர் எடுத்துக் கொண்டு, பின் அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1/2 டீஸ்பூன் கற்பூரம் போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதை கூந்தலில் தடவி, காய்ந்த பிறகு தலைமுடியை வெற்று நீரால் கழுவ வேண்டும்.

இந்த ஆம்லா ரீத்தா சீயக்காய் பவுடரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க் மூலம் இந்த முடி பிரச்சனைகளைத் தீர்க்கலாம். எனினும், உச்சந்தலையில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், அழகு நிபுணரின் உதவியுடன் இதைக் கையாள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Reetha Shikakai: நரைமுடி கருப்பாக மாற ஆம்லா ரீத்தா சீகக்காயை இப்படி பயன்படுத்துங்க

Image Source: Freepik

Read Next

Summer Haircare: கொளுத்தும் வெயிலில் வாரத்திற்கு எத்தனை முறை தலைக்கு ஷாம்பு போடலாம்?

Disclaimer