Ways To Use Beetroot Peel For Dandruff: இன்றைய நவீன காலகட்டத்தில் பெண்கள் முடி சார்ந்த பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர். இதில் பொடுகு பிரச்சனையும் அடங்கும். இந்த பொடுகு பிரச்சனை சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், முடி வேகமாக உதிர ஆரம்பிக்கலாம்.
இதற்கு சந்தையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இதன் காரணமாக, முடியின் தரம் மோசமடையலாம். ஏனெனில், இந்த பொடுகை நீக்கும் பொருட்களில் முடியை சேதப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் பொடுகை நீக்க பீட்ரூட் தோலை பயன்படுத்தலாம். இது முடியில் உள்ள பொடுகு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Oil Tips: தலை முடிக்கு எப்படி எண்ணெய் தடவனும் தெரியுமா? தெரிஞ்சிக்கலாம் வாங்க…
பொடுகு நீங்க பீட்ரூட் தோல் பயன்படுத்தும் முறை
- பீட்ரூட்டைப் போலவே பீட்ரூட் தோல்களிலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இரும்பு, கால்சியத்துடன் தாதுக்கள் மற்றும் பல வகையான வைட்டமின்கள் உள்ளது. இந்த பீட்ரூட் தோலை முடிக்கு பயன்படுத்துவது பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட வைப்பதுடன், முடி வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- பீட்ரூட் தோலை ப்யூரி செய்து, அதனுடன் தயிர் சேர்த்து ஹேர் மாஸ்க்கை தயார் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்கை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். தயிருடன் பீட்ரூட் தோல் கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த ஹேர் மாஸ்க்கை 30 நிமிடங்களுக்கு வைத்து பின் தண்ணீரில் கழுவி விடலாம். பிறகு இதை லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். இதில் முதல் முறையாக பயன்படுத்தும் போது பொடுகு பிரச்சனை குறைவாகவே தெரியும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறையாவது தடவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Coloring Side Effects: முடிக்கு அடிக்கடி கலரிங் செய்வதில் இத்தனை பிரச்சனை இருக்கா?
- ஆப்பிள் சைடர் வினிகர் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இதை பீட்ரூட் தோல்களின் ப்யூரியுடன் கலந்து ஹேர் மாஸ்க்காக தயார் செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவது பொடுகு பிரச்சனையைக் குறைத்து கூந்தல் பளபளப்பை அதிகரிக்கிறது. இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ளவும். பின்னர் மசாஜ் செய்யும் போது லேசான ஷாம்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவி விடலாம்.
- முதலில் பீட்ரூட் தோலை சுத்தமான தண்ணீரில் கழுவி, பிறகு மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டாக தயார் செய்ய வேண்டும். இந்த பீட்ரூட் தோலின் பேஸ்ட்டில் 1 எலுமிச்சைச் சாறு சேர்த்து பின்னர் இதை முடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவ வேண்டும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சைச் சாறு கலந்த இந்த மாஸ்கை தலைமுடியில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவ வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
இந்த வழிகளில் தலைமுடிக்கு பீட்ரூட் தோலை பயன்படுத்தி பொடுகை நீக்கலாம். கூடுதலாக, இது முடியை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்! என்னென்ன சாப்பிடலாம்?
Image Source: Freepik