When To Drink Milk According To Ayurveda: இன்று தினசரி உட்கொள்ள வேண்டிய சிறந்த உணவுகளில் ஒன்றாக பால் கருதப்படுகிறது. ஏனெனில் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே ஆரோக்கிய நலனுக்காக, தினமும் ஒரு டம்ளர் பால் அருந்த வேண்டும். பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி, டி மற்றும் இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆயுர்வேதத்தில் பால் ஒரு கனமான மற்றும் சத்தான உணவாகக் கருதப்படுகிறது. இது வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்துவதுடன், கபாவை அதிகரிக்கிறது. இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பால் கொண்டிருப்பினும், அதை சரியான முறையில் உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆனால், சிலர் வெற்று பாலைக் குடிப்பதை விட, குளிர்ச்சியான பால், பாலுடன் சில உணவுகள் சேர்த்து உட்கொள்வதை விரும்புகின்றனர். இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். அதிலும் குறிப்பாக, பாலுடன் பொருந்தாத உணவுகளை எடுத்துக் கொள்வது தீமை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த வெயில்ல அதிக ஸ்பைசி உணவுகள் சாப்பிடுபவர்களா நீங்க? ஆயுர்வேதம் சொல்லும் விளைவுகள் இதோ!
பாலில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்
பாலில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி12, மற்றும் டி, புரதம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும், தாதுக்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவையும் நிறைந்துள்ளது. எனவே இவை முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பாலில் நிறைந்துள்ள செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து பண்புகளுக்காக ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், பால் குடிப்பது எவ்வளவு நன்மையோ, அதை எந்த நேரம் குடிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் ஆயுர்வேத முறைப்படி, பால் குடிக்க வேண்டிய சிறந்த நேரம் என்ன என்பதைக் காணலாம்.
ஆயுர்வேதத்தில் பால் குடிக்க சரியான நேரம்
ஆயுர்வேதத்தின்படி, பால் அருந்துவதற்கான சரியான மற்றும் சிறந்த நேரமாக அமைவது இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் ஆகும். இதில் கூடுதல் நன்மைகளைப் பெற, பாலுடன் அஸ்வகந்தாவை சேர்த்து சாப்பிடலாம். இது தூக்கத்தை மேம்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. அதே சமயம், ஆயுர்வேதத்தில் பால் ஒவ்வாமை உள்ளவர்களைத் தவிர மற்ற அனைவரும் பால் அருந்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தசைகளை வளர்க்க விரும்புபவர்கள் காலை நேரத்தில் முதலில் பால் குடிக்கலாம். மற்றவர்கள் ஓய்வுக்காக மாலை முதல் இரவு நேரம் வரை பால் அருந்துவது நல்லது.
ஏன் இரவில் பால் குடிப்பது நல்லது?
ஓஜஸ் என்பது ஆயுர்வேதத்தில் செரிமானம் அடையக்கூடிய ஒரு நிலையாகும். இரவு நேரத்தில் பால் அருந்துவது ஓஜஸை ஊக்குவிக்கிறது. மேலும், பாலில் மயக்கமடையும் பண்புகள் நிறைந்துள்ளது. எனவே தூங்கும் முன் பால் குடிப்பது மனதை அமைதிப்படுத்துவதுடன், நல்ல ஆரோக்கியமான தூக்கத்தைப் பெற உதவுகிறது. மேலும், பாலில் இருந்து கால்சியம் உறிஞ்சுதல் குறைவாக செயல்படுகிறது. எனவே இது இரவு தூக்கத்திற்கு ஏற்றதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!
எப்படி பால் அருந்த வேண்டும்?
- பாலை எப்போதும் கொதிக்க வைத்து அருந்த வேண்டும். ஏனெனில் பச்சைப் பால் உட்கொள்வது கனமான உணர்வைத் தருவதுடன், செரிமானம் அடைய குளிர்ச்சியாகவும் இருக்கும்.
- பாலைக் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பாக அருந்துவதன் மூலம் சளி சமநிலையில் இருப்பதை உணரலாம்.
- கொதிக்க வைத்த பாலை ஆறிய பிறகுக் குடிப்பது பித்த தோஷத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
- பாலைக் கொதிக்க வைக்கும் போது, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் பால் அளவு குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இதனால் பாலின் தன்மை இலகுவாகி, எளிதில் செரிமானம் அடையலாம்.

பாலுடன் சேர்க்க வேண்டியவை மற்றும் சேர்க்கக் கூடாதவை
- ஆயுர்வேதத்தின் படி, பாலில் சர்க்கரை, திராட்சை, அரிசி, ஓட்ஸ், பூண்டு, பேரீச்சம்பழம், நெய், பெருஞ்சீரகம், உலர் இஞ்சி தூள் போன்ற மசாலாப் பொருள்கள் போன்றவற்றைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
- அதே போல, தயிர், சிட்ரஸ் பழங்கள், உப்பு, மீன், முட்டைகள், கொண்டைக்கடலை பருப்பு, பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடும் முன்பும், பின்பும் பால் உட்கொள்வதைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆயுர்வேதத்தில் இது போன்ற சரியான வழிகளைத் தேர்ந்தெடுத்து, அதன் படி பால் அருந்துவதன் மூலம் பாலிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இரவு 1 பல் பூண்டு சாப்பிட்டு தூங்குங்க! என்ன நடக்கும்னு பாருங்க
Image Source: Freepik