Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!

  • SHARE
  • FOLLOW
Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!

ஆனால், இந்த முறைகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க, சில இயற்கை பயனுள்ள மாற்று வழிகளைத் தேர்வு செய்யலாம். ஆயுர்வேதத்தில் சில தாவரங்கள் பல தலைமுறைகளாகவே அவற்றின் மருத்துவ குணங்களுக்காக மட்டுமல்லாமல், வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இவை பற்களை வெண்மையாக்க உதவுகிறது. எனவே ஆரோக்கியமான மற்றும் வெண்மையான பற்களைப் பெற விரும்புபவர்கள் இந்த ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Morning Routine: ஆரோக்கியமாக காலை பழக்கத்திற்கு இதை செய்தால் போதும்.!

வெண்மையான புன்னகையைப் பெற உதவும் ஆயுர்வேத மூலிகைகள்

சில ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வெண்மையான மற்றும் ஆரோக்கியமான புன்னகையைப் பெறலாம். இதில் வெண்மையான பற்கள் பெற உதவும் மூலிகைகளையும், பயன்படுத்தும் முறைகளையும் காணலாம்.

துளசி

ஆயுர்வேதத்தில் புனித துளசி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் படி, பல் பராமரிப்பு முறையிலும் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது. புனித துளசியானது பற்களை வெண்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் மருத்துவ குணங்கள் பற்களில் பிளேக் மற்றும் குழிவுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

பற்களின் வெண்மைக்கு துளசி பயன்படுத்தும் முறை

  • சில துளசி இலைகளை எடுத்து அதை வெயிலில் உலர்த்தி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாரத்திற்கு சில முறை பல் துலக்க தூள் பயன்படுத்தலாம்.
  • இவ்வாறு துளசி பொடியைத் தூளாக்கி பயன்படுத்துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தைப் பேணிக் காக்க முடியும். இது பற்களை படிப்படியாக வெண்மையாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health Foods: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் டாப் ஆயுர்வேத உணவுகள் இது தான்!

சேஜ் (Sage)

ஆயுர்வேதத்தில், சேஜ் ஒரு நன்கு அறியப்பட்ட குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட சிறந்த மூலிகையாகும். இதில் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் கலவைகள் நிறைந்துள்ளது. இவை பற்களிலிருந்து கறைகளை அகற்ற உதவுகிறது. சேஜில் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும், பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது.

பற்களுக்கு சேஜ் பயன்படுத்துவது எப்படி

  • புதிய சேஜ் இலைகளை நசுக்கி, அதை நேரடியாக பற்களில் தேய்க்கலாம்.
  • சேஜ் இலைகளை நன்றாக உலர்த்தி, பின் பொடியாக நறுக்கி, பற்பசையாக பயன்படுத்தலாம்.
  • பற்களுக்கு சேஜ் இலைகளைப் பயன்படுத்துவது தூய்மையான மற்றும் வெண்மையான புன்னகைக்கு உதவுகிறது.

வேம்பு

இந்திய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகவே கிராம மருந்தகம் என்றழைக்கப்படும் வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேப்பங்கொட்டையில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது பற்சிதைவைத் தடுக்கவும், பிளேக் உருவாவதைத் தடுக்கவும் திறம்பட உதவுகிறது. வாய்வழி ஆரோக்கியத்தில் வேம்பு பயன்படுத்துவது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் பற்களை வெண்மையாக்க உதவுகிறது.

வாய்வழி ஆரோக்கியத்தில் வேம்பு பயன்படுத்துவது எப்படி?

  • வாய் ஆரோக்கியத்திற்கு புதிய வேப்ப இலைகளை மெல்லுவது அல்லது இயற்கையான பல் துலக்கியாக வேப்பங்குச்சிகளை பயன்படுத்தலாம்.
  • இது தவிர, கடைகளில் விற்பனை செய்யப்படும் வேம்பு அடிப்படையிலான பற்பசையைப் பயன்படுத்தலாம்.
  • வாய்வழி பராமரிப்பு வழக்கத்தில் வேப்பம்பூவை சேர்ப்பது பற்களை இயற்கையாக மற்றும் சுத்தமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Longevity: ஆயுளைக்காக்கும் ஆயுர்வேதம்! நீண்ட நாள் வாழ இந்த மூலிகையை எடுத்துக்கோங்க

கிராம்பு

கிராம்புகளில் ஆன்டிசெப்டிக் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது பற்களின் பராமரிப்பில் நன்கு அறியப்பட்ட மசாலாவாகக் கருதப்படுகிறது. இதில் முதன்மையாக கிராம்பு எண்ணெயில் யூஜெனால் என்ற கலவை நிறைந்துள்ளது. இது பற்களில் தகடு மற்றும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

வாய் ஆரோக்கியத்தில் கிராம்பு பயன்படுத்தும் முறை

  • வாய் ஆரோக்கியத்திற்கு கிராம்புகளை நேரடியாக சிறிது நேரம் பற்களின் ஓரத்தில் வைத்து பயன்படுத்தலாம்.
  • மாற்றாக, கிராம்புகளை நசுக்கித் தூளாக்கி சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இந்த பேஸ்ட்டைக் கொண்டு பற்களைத் துலக்கலாம்.
  • கிராம்புவின் வழக்கமான பயன்பாடு வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிக்கவும், பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள் அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்காக நன்கு அறியப்பட்டதாகும். இது பற்களின் வெண்மைக்கு உதவும் இயற்கையான தேர்வாக பயன்படுகிறது. மேலும் இதில் குர்குமின் நிறைந்துள்ளது. கூடுதலாக, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. மஞ்சள் பிளேக் மற்றும் ஈறு அழற்சியைக் குறைத்து வாய்வழி பராமரிப்பு வழக்கத்திற்கு ஒரு சிறந்த கூடுதலாக செயல்படுகிறது. ஆனால் இதை மிகவும் தாராளமாக பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வாய்வழி ஆரோக்கியத்தில் மஞ்சள் பயன்படுத்தும் முறை

  • சிறிதளவு மஞ்சள் தூளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் உருவாக்க வேண்டும்.
  • பல் துலக்குதலைப் பயன்படுத்தி, பற்களில் பேஸ்ட்டைப் பயன்படுத்த வேண்டும்.
  • இதை கழுவும் முன்னதாக சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.

இவ்வாறு பற்களின் ஆரோக்கியத்திற்கு இந்த ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த வெயில்ல அதிக ஸ்பைசி உணவுகள் சாப்பிடுபவர்களா நீங்க? ஆயுர்வேதம் சொல்லும் விளைவுகள் இதோ!

Image Source: Freepik

Read Next

Ayurvedic Morning Routine: ஆரோக்கியமாக காலை பழக்கத்திற்கு இதை செய்தால் போதும்.!

Disclaimer

குறிச்சொற்கள்