$
What Is The Best Food For Gut Health Ayurveda: உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் குடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது உடல் எடை, அறிவாற்றல் செயல்பாடு, அழற்சி, மனநிலை மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல், குடல் மகிழ்ச்சி ஹார்மோனான செரடோனினை 90% உற்பத்தி செய்கிறது. இது மனச்சோர்வுக்கும் குடல் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
குடலில் சில நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இவை செரிமான மேம்பாடு, உடலிலிருந்து நச்சுக்களை அகற்றுவது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவது போன்ற பல்வேறு உடல்நல செயல்படுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, இருதய நோய்கள், இரைப்பை குடல் கோளாறுகள், நாளமில்லாச் சுரப்பி செயல்பாடு, மனநலம் மற்றும் பல புற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்க இந்த குடல் நுண்ணுயிரிகள் உதவுகின்றன. எனவே குடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் அவசியமானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Acidity Ayurvedic Remedies: தீராத நெஞ்செரிச்சலா? இந்த ஆயுர்வேத ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க
குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேத உணவுகள்
ஆயுர்வேதத்தில் சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இஞ்சி
ஆயுர்வேதத்தில் உலர் இஞ்சி உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது செரிமான கோளாறுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தசை வலி, சளி, இருமல், தொண்டைப்புண், வீக்கம், அதிகப்படியான கொழுப்பு போன்றவற்றைப் போக்க உதவுகிறது. மேலும் உலர் இஞ்சியை எடுத்துக் கொள்வது எல்டிஎல் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க ஏதுவாக அமைகிறது. இஞ்சியில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற கலவைகள் நிறைந்துள்ளன. மேலும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

பசு நெய்
இது ஆயுர்வேதத்தில் சிறந்த அறியப்பட்ட உடலுக்கு நன்மை தரும் பானமாகும். பசு நெய் இயற்கையிலேயே குளிர்ச்சியானத் தன்மையையும், இனிமையான சுவையையும் கொண்டதாகும். மேலும், வாதம் மற்றும் பித்தத்தைத் தணிக்க உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தி, தசைகளை வலுப்படுத்துகிறது. பசு நெய் அருந்துவது உடலில் வாதம் மற்றும் பித்தத்தைத் தணிக்கிறது. மேலும் சரும பொலிவு, முடி, நோயெதிர்ப்புச் சக்தி போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. இதிலுள்ள ப்யூட்ரிக் அமிலம் குடலைச் சுற்றியுள்ள செல்களை வளர்க்கவும், செரிமான மண்டலத்தில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் டீ
ஆயுர்வேதத்தில் கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம் மூன்றுமே முக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த விதைகள் ஒவ்வொன்றுமே செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை வாயு, அஜீரணம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த தேநீரை அருந்துவது மாதவிடாய் பிடிப்பைக் குறைக்கிறது. மேலும் அனைத்து வகையான குடல் பிரச்சனைகளுக்கும் சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் சிறந்த தேர்வாகும். மேலும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும், வயிற்று வலி, குமட்டல் போன்றவற்றிற்குத் தீர்வு தரவும் இந்த தேநீர் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சாப்பிடும் போது 32 முறை உணவை மென்று சாப்பிடணுமாம்! ஏன் தெரியுமா?
ராக் சர்க்கரை
ராக் சர்க்கரை ஆனது கிரிஸ்டல் சர்க்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரிய சர்க்கரை படிகங்களால் ஆன ஒரு வகையான தின்பண்டமாகும். உடல் பருமன், குடல் பிரச்சனைகள், பிசியோஎஸ், நோயெதிர்ப்பு குறைபாடுகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக ராக் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ராக் சர்க்கரையானது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை விட குறைவாக பதப்படுத்தப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் இது விரைவான ஆற்றலை வழங்குகிறது. மேலும் செரிமான அமைப்பை எளிதாக்குகிறது.

மோர்
குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த ஆயுர்வேத பானங்களில் ஒன்று மோர் ஆகும். இதில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இந்த புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கிறது. மேலும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தில் அதிகப்படியான கபா மற்றும் வட்டாவை சமன் செய்ய மோர் சிறந்த தேர்வாகும். இது வீக்கம், செரிமான கோளாறுகள், இரைப்பை குடல் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றிற்கு உதவுகிறது.
இந்த வகை ஆயுர்வேத உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது தவிர, செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அன்றாட உடற்பயிற்சி மற்றும் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மோர் குடிக்க போறீங்களா? எந்த டைம்ல குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க
Image Source: Freepik