Natural liver healing tips backed by ayurveda: உடலில் காணப்படும் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக கல்லீரலும் அமைகிறது. இது நம் உடலில் செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற பல்வேறு முக்கிய உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் மிகப்பெரிய உள் உறுப்பாக விளங்கும் கல்லீரல், செரிமானத்தை எளிதாக்குவதுடன் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும், ஆற்றலை வழங்கவும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை ஆதரிக்கவும் உதவுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் குறிப்பிட்ட படி, ஆயுர்வேத தத்துவத்தில், கல்லீரல் பித்த தோஷத்தின் மைய உறுப்பாகவும், உடலின் ஆரோக்கிய இயந்திரமாகவும் செயல்படுகிறது. இந்த பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது கல்லீரலை இயற்கையாகவே குணப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இதில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில ஆயுர்வேத குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Women Fatty Liver: பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருக்கும்போது உடலில் தோன்று 5 அறிகுறிகள்!
கல்லீரல் ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேத குறிப்புகள்
கல்லீரலுக்கு ஏற்ற உணவை உட்கொள்வது
ஆயுர்வேத உணவுத் திட்டத்தில் லேசான மற்றும் புதிய இயற்கை உணவுகள் உள்ளது. இவை கல்லீரலை எளிதாக செயலாக்க அனுமதிக்கிறது. அதன் படி, அன்றாட உணவில் கீரை, முட்டைக்கோஸ் மற்றும் வெந்தயம் உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை கல்லீரலை சுத்தப்படுத்தி புத்துணர்ச்சியூட்டும் முகவராக செயல்படுகிறது. மேலும் உணவில் கனமான இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்குப் பதிலாக, முழு தானியங்களுடன் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய், வறுத்த பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கல்லீரலுக்கு சுமையை ஏற்படுத்தலாம். எனவே இவற்றைத் தவிர்ப்பது அவசியம். நச்சு நீக்கும் உணவுகளான பீட்ரூட், கேரட் மற்றும் முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். காலையில் சூடான எலுமிச்சை கலந்த தண்ணீர் அல்லது மூலிகை தேநீர் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் செயல்பாடுகளுடன் இயக்க சிகிச்சையைக் கையாள்வது
ஆயுர்வேதக் கொள்கைகளின்படி, கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியமாகும். இதில் பிராணயாமம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தோஷ சமநிலையையும் மன அழுத்த அளவையும் கட்டுப்படுத்தி, கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க உதவுகின்றன. மேலும், நடைபயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் கொழுப்பு கல்லீரல் நோய் உருவாவதைத் தடுக்க உதவுவதுடன், கல்லீரல் இயற்கையாகவே தன்னை மீட்டெடுக்க உதவுகிறது.
மேலும், புஜங்காசனம் (கோப்ரா போஸ்) மற்றும் தனுராசனம் (வில் போஸ்) போன்ற இரண்டு குறிப்பிட்ட யோகாசனங்கள், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், மென்மையான கல்லீரல் தூண்டுதலையும் வழங்குகிறது. இது தவிர, ஆழ்ந்த சுவாச நுட்பங்களுடன் கூடிய கவனமான உடற்பயிற்சியின் மூலம் கல்லீரல் அதன் அன்றாட செயல்பாடுகளை மிகவும் திறம்படச் செய்ய வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்க உங்க டயட்ல சேர்க்க வேண்டிய 3 டாப் உணவுகள் இங்கே
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது
பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தின்படி, கல்லீரலைப் பாதுகாக்க பல்வேறு இயற்கை மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் காணப்படுகின்றன. இதில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் ஒரு அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. இவை நச்சுகளை உடைத்து கல்லீரல் திசுக்களைப் பாதுகாக்கிறது.
மேலும், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் போன்றவை கல்லீரல் திசுக்களை மீட்டெடுக்கவும், நச்சு நீக்க செயல்முறைகளுக்கும் உதவுகின்றன. மூன்று பழங்களின் கலவையாக அமையும் திரிபலாவை உட்கொள்வது செரிமான பாதைகளை மென்மையாக சுத்தப்படுத்த உதவுகிறது. அதே சமயம், வழக்கமான நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்கிறது.
இந்த மூலிகைகளை பொடிகளாகவோ அல்லது தேநீராகவோ எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது இதை சப்ளிமெண்ட்களாகவோ அல்லது உணவில் சேர்க்கவோ பயன்படுத்த வேண்டும். இதன் சரியான அளவைத் தீர்மானிப்பதற்கு முன் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுக வேண்டும்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இந்த ஆயுர்வேத பழக்கங்களைக் கையாள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்க இந்த ஒரு உணவை சாப்பிடுங்க
Image Source: Freepik