Best liver-friendly foods doctors recommend adding to your diet: உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. இவை நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், புரதங்களின் செரிமானம், தாது சேமிப்பு, பித்த உற்பத்தி மற்றும் இரத்த வடிகட்டுதல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்ய கல்லீரல் உதவுகிறது. இதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் கல்லீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன. பொதுவாக, உணவுமுறை உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகள் கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. பல உணவுகளில் கல்லீரல் நொதிகளை மேம்படுத்தவும், கொழுப்பு படிவதிலிருந்து பாதுகாக்கவும், வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் பல்வேறு சேர்மங்கள் உள்ளன. உடலில் புரதங்கள், கொழுப்பு மற்றும் பித்தத்தை உற்பத்தி செய்வது முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமிப்பது வரை பல உடல் செயல்முறைகளில் கல்லீரல் பொறுப்பாக அமைகிறது.
இது குறித்து, புளோரிடாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் மருத்துவர் ஜோசப் சல்ஹாப், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் மூன்று காய்கறிகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரல் நோயா அவதியா? கல்லீரல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் உணவுகள்
ப்ரோக்கோலி (Broccoli)
டாக்டர் சல்ஹாப்பின் பட்டியலில் உள்ள முதல் காய்கறியாக ப்ரோக்கோலி அமைகிறது ப்ரோக்கோலி உள்ளிட்ட சிலுவை காய்கறிகள் அதன் கல்லீரல் பாதுகாப்பு விளைவுகளுக்காக நன்கு பெயர் பெற்றவையாகும். ப்ரோக்கோலியில் சல்ஃபோராபேன்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் நச்சு நீக்க செயல்முறைகளை மேம்படுத்துவதோடு தொடர்புடைய இயற்கையாகவே நிகழும் சேர்மங்கள் ஆகும்.
ஆய்வு ஒன்றில், கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களில் ப்ரோக்கோலி முளை சாறு ALT மற்றும் காமா-குளுட்டமைல் டிரான்ஸ்பெப்டிடேஸ் (γ-GTP) அளவைக் கணிசமாகக் குறைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ப்ரோக்கோலியை சாப்பிட விரும்பாதவர்களுக்கு, மருத்துவர், "உங்களுக்கு ப்ரோக்கோலி பிடிக்கவில்லை என்றால், முட்டைக்கோஸ், காலே அல்லது பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்ற சிலுவை காய்கறிகளிலிருந்து அதே நன்மையைப் பெறலாம்" என்று பரிந்துரைக்கிறார்.
பீட்ரூட் (Beetroot)
இரைப்பை குடல் நிபுணர் சல்ஹாப் அவர்கள், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உணவில் சேர்க்க வேண்டிய மற்றொரு காய்கறியாக பீட்ரூட்டைப் பரிந்துரைத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “பீட்ரூட்டில் பீட்டாலைன்கள் என்று ஒன்று உள்ளது. இவை தான் அதற்கு சிவப்பு-ஊதா நிறத்தை தருகின்றன. பீட்டாலைன்கள் கல்லீரலுக்குள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், இது குணமடைய அனுமதிக்கிறது” என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கொழுப்பு கல்லீரல் உட்பட கல்லீரல் நோய்களால் போராடுபவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும், ஆய்வு ஒன்றில், பீட்ரூட் சாறு கூடுதல் NAFLD நோயாளிகளில் கல்லீரல் அழுத்தத்தின் முக்கிய குறிப்பான்களான அஸ்பார்டேட் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் (AST) மற்றும் அலனைன் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் (ALT) போன்ற கல்லீரல் நொதிகளைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரலை மாற்றியமைக்க இந்த உணவுகள் சிறந்தவை.!
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படுவதால் ஏற்படும் கல்லீரல் ஸ்டீடோசிஸ் போன்ற கடுமையான கல்லீரல் நிலைகளையும் இந்த காய்கறி மேம்படுத்துகிறது. பீட்ரூட்டில் ஃபோலேட் மற்றும் மாங்கனீஸ் உள்ளன. இவை கல்லீரலில் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்துகிறது. எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பீட்ரூட்டை வறுத்து, சாறு பிழிந்து அல்லது சாலட்களாக அரைத்து சாப்பிடலாம்.
கூனைப்பூக்கள் (Artichokes)
கூனைப்பூ போன்ற சுவையான பூக்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் கூனைப்பூவை "சிறந்த கல்லீரல் ஆரோக்கிய உணவுகளில் ஒன்று" என மருத்துவர் விவரித்துள்ளார். அவரின் கூற்றுப்படி, "கூனைப்பூ சிறந்த கல்லீரல் ஆரோக்கிய உணவுகளில் ஒன்று என்பதற்கு எங்களிடம் சில நல்ல சான்றுகள் உள்ளன. ஏனெனில் இவை கல்லீரலுக்கு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான சயனுரின் எனப்படும் ஒன்றை உள்ளடக்கியுள்ளது” என மருத்துவர் கூறுகிறார்.
இந்த ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்கவும் பித்த உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை கொழுப்புகளை உடைக்கவும் நச்சுகளை அகற்றவும் பெரிதும் உதவுகிறது. மேலும் அவர், “நான் அதை ஒரு ஸ்ப்ரெட்டாகச் செய்து சில புளிப்பு ரொட்டியில் வைக்க விரும்புகிறேன். மேலும் இது ஒரு சரியான மதிய உணவு” என கூறுகிறார்.
மருத்துவர் பரிந்துரைத்த இந்த மூன்று உணவுகளுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகள்.!
Image Source: Freepik