கல்லீரல் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்க இந்த ஒரு உணவை சாப்பிடுங்க

What happens if we eat bottle gourd daily: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை சாப்பிடுவது கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தி கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளை பெருமளவில் குறைக்கிறது.
  • SHARE
  • FOLLOW
கல்லீரல் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்க இந்த ஒரு உணவை சாப்பிடுங்க


Can bottle gourd cure fatty liver: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான நேரங்களில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் காரணமாக கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், சில நேரங்களில் இவை வேறு காரணங்களாலும் ஏற்படலாம். அதிர்ஷ்டவசமாக, சீரான உணவுமுறையைக் கையாள்வதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கலாம்.

அவ்வாறு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, வழக்கமான உணவில் சுரைக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். சுரைக்காயில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வது கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவுகிறது. பொதுவாக கல்லீரல் உடலுக்கு மட்டுமல்லாமல், கல்லீரலை நச்சு நீக்குவதற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. கல்லீரலில் குவிந்துள்ள நச்சுக்களை அகற்றுவதற்கு சுரைக்காயை எடுத்துக் கொள்ளலாம். இது குறித்து டெல்லியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் பிராச்சி சாப்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் பிரச்னை இருக்கா.? இந்த உணவு பக்கமே போகாதீங்க.. 

சுரைக்காய் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கான நன்மைகள்

கல்லீரல் செயல்பாடுகளை மேம்படுத்த

பொதுவாக, கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்படும்போது கல்லீரல் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்நிலையில், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். இதற்கு சுரைக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். இவை கல்லீரல் செயல்பாடுகளை செயல்படுத்துவதோடு, கல்லீரலின் செயல்திறனையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும், கல்லீரலை நச்சு நீக்குவதன் மூலம் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

கல்லீரலை நச்சு நீக்கம் செய்ய

கல்லீரலை நச்சு நீக்கம் செய்ய விரும்புபவர்கள், சுரைக்காய் சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு சுரைக்காயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்றவையே காரணமாகும். இவை கல்லீரலில் படிந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் கல்லீரலில் நச்சு நீக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இவை கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகின்றன. மேலும், கல்லீரலை நச்சு நீக்கம் செய்ய, சுரைக்காய் சாற்றையும் குடிக்கலாம். மேலும், அன்றாட உணவில் சுரைக்காயைச் சேர்க்கலாம்.

கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதற்கு

வழக்கமான உணவில் சுரைக்காயைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் செல்கள் சேதமடைவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம். அது மட்டுமல்லாமல், சுரைக்காய் சாப்பிடுவது கல்லீரல் செல்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சுரைக்காய் சாப்பிடுவது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் செல்கள் சேதமடைவதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி பெயின் கில்லர் மாத்திரை யூஸ் பண்ணுவீங்களா? இது கல்லீரலுக்கு எவ்வளவு ஆபத்து தெரியுமா?

செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க

கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் சில சமயங்களில் செரிமான அமைப்புடன் தொடர்புடையவையாக உள்ளது. எனவே, செரிமான அமைப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சனையை சந்திப்பவர்களாக இருப்பின், அவர்களின் கல்லீரலும் பாதிக்கப்படலாம். உண்மையில், கல்லீரல் செரிமான அமைப்பு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், பித்த உற்பத்தியையும் அதிகரிக்கிறது. மேலும், கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டால், அது செரிமான அமைப்பை மட்டுமல்லாமல் கல்லீரலையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

கல்லீரல் வீக்கத்தைக் குறைப்பதற்கு

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம். கல்லீரல் வீக்கம் இருந்தால், சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு சுரைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதே காரணமாகும். இவற்றை சாப்பிடுவதன் மூலம் கல்லீரலில் ஏற்படும் வீக்கமும் குறைகிறது. மேலும், சுரைக்காயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுவதோடு மட்டுமல்லாமல் கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இவ்வாறு அன்றாட உணவில் சுரைக்காயைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலை ஸ்ட்ராங்காக வைக்க இந்த 5 ஹெர்பல் டீயை எடுத்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க

Disclaimer