சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க

Why should you wait 30 minutes to drink after eating: உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளது. இவ்வாறு உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், அது செரிமான அமைப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதில் உணவு சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க


Why should you not drink water immediately after eating: பொதுவாக அன்றாட வாழ்வில் தண்ணீர் அருந்துவது மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. அதில் ஒன்றாகவே சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கம் அமைகிறது. ஆம். இன்று பலரும் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். மேலும், பல நேரங்களில் அவர்கள் உணவு சிக்கிக் கொள்ளாமல் இருக்க உணவுடன் தண்ணீரையும் சேர்த்து அருந்துகின்றனர்.

ஆனால், சிலர் உணவுடன் ஒரு முழு கிளாஸ் அதிகளவு தண்ணீரையும் சேர்த்து குடிக்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக, உணவுடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. இதைச் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஆம் உண்மையில், உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பைப் பாதிக்கக்கூடும். மேலும், இந்த செயல் சில நேரங்களில் இன்சுலின் ஸ்பைக் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நல்லதா? அப்படி குடித்தால் என்னவாகும்?

குறிப்பாக, நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு மற்றும் பானத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதில் உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் ஏன் குடிக்கக்கூடாது என்பது குறித்து டெல்லியில் உள்ள அகர்வால் ஹோமியோபதி கிளினிக்கின் டாக்டர் பங்கஜ் அகர்வால் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.

உணவு சாப்பிட்ட உடனே ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது?

சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்தக் கூடாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இதில் முக்கியமானதாக அமைவது, செரிமான அமைப்பை அதிகம் பாதிப்பதே ஆகும். இவ்வாறு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் அது செரிமான நொதிகளையும் வயிற்றில் இருக்கும் அமிலத்தையும் நீர்த்துப்போகச் செய்கிறது.

மேலும் உணவு உட்கொண்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடலில் அமிலத்தின் அளவை குறைக்கலாம். இதன் காரணமாக உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் நிகழும் செயல்முறையையும் பாதிப்பதாக அமைகிறது.

சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் தண்ணீர் குடிக்க வேண்டும்?

உணவு உட்கொண்ட சிறிது நேரத்திற்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். எனவே, உணவை சாப்பிட்ட பின், தண்ணீர் குடிப்பதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் இடைவெளி எடுத்து பிறகு குடிக்க வேண்டும். எனினும், சாப்பிட்ட உடனேயே தாகம் எடுத்தால், ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தண்ணீரை எப்போதெல்லாம் மற்றும் எவ்வளவு குடிப்பது உடலுக்கு நல்லது தெரியுமா? 

சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் அடையாது. இதன் காரணமாக, உணவு ஜீரணமாகாமல் வயிற்றில் அப்படியே இருக்கும். அதே சமயம், உணவு உட்கொண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உடலில் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் உணவும் எளிதில் செரிமானம் அடைகிறது. இதனுடன், ஊட்டச்சத்துக்களும் உடலில் எளிதில் நன்றாக உறிஞ்சப்படுகின்றன.

உணவு உட்கொண்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?

  • உணவு உட்கொண்ட பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, சில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம் உணவு எளிதில் செரிமானம் அடைகிறது.
  • உணவு சாப்பிட்ட பிறகு உணவை ஜீரணிப்பது மிகவும் முக்கியமாகும். இதற்கு, நாம் ஒரு சிறிய நடைப்பயிற்சியை மேற்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
  • உணவு உட்கொண்ட பின்னர், புதினா மற்றும் எலுமிச்சை நீர் குடிப்பது உடலில் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • செரிமான ஆரோக்கியத்திற்கு கொத்தமல்லி மற்றும் சீரக நீரையும் குடிக்கலாம்.
  • மேலும், உணவு சாப்பிட்ட பின்னர் வஜ்ராசனம் செய்வது செரிமான அமைப்பில் நல்ல விளைவைத் தருகிறது.
  • இந்த சூழ்நிலையில், சிறிது ஓய்வு எடுப்பதும் உங்களுக்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா? நிபுணர்களின் பதில் இங்கே!

Image Source: Freepik

Read Next

இந்த பிரச்சனை உள்ளவங்க மறந்து கூட கரும்பு ஜூஸ் குடிக்கக்கூடாது! ஏன் தெரியுமா?

Disclaimer