How much water is safe to drink a day: நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு முதன்மையான ஆதாரமாக விளங்குகிறது. எனவே, தான் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது, நீரிழப்பு ஏற்படுவதுடன் பலதரப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது. அதே சமயம், அதிகளவு தண்ணீர் குடிப்பதும், உடல் ஆரோக்கியத்தைப் பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடும். எனவே, உடல் ஆரோக்கியத்திற்குப் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் நம் அன்றாட வாழ்வில் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
எப்போது தண்ணீர் குடிப்பது சிறந்தது?
Webmd-ல் குறிப்பிட்ட படி, அன்றாட வாழ்க்கையில் நாம் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதைக் காண்போம்.
எடை குறைக்க விரும்பும் போது
தண்ணீர் என்பது கலோரிகள் இல்லாத ஒரு வழியாகும். இது நம்மை முழுமையாக உணர வைப்பதுடன், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், அதிக எடை கொண்ட 50 பெண்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுமார் 2 கப் தண்ணீர் குடித்தனர். மேலும், அவர்களின் உணவில் வேறு எந்த மாற்றங்களையும் பின்பற்ற வேண்டும். 8 வாரங்களுக்குப் பிறகு, எடை குறைந்ததுடன், உடல் நிறை குறியீட்டெண் மற்றும் உடல் அமைப்பு மதிப்பெண்களைக் குறைத்தனர். இது ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்கும் உடலின் செயல்முறையாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Water Weightloss: தண்ணீர் குடித்தே எடையை குறைக்கலாம்.! அது எப்படி.? இங்கே காண்போம்..
பசி எடுக்கும் போது
பசி எடுப்பது உணவு உண்பதற்காக மட்டுமல்லாமல், சில நேரங்களில் தாகத்தின் காரணமாகவும் இருக்கலாம். ஏனெனில், மூளை இந்த தூண்டுதல்களை ஒரே மாதிரியாக அங்கீகரிக்கிறது. எனவே உணவு பரிமாறுவதற்கு முன்பாக, முதலில் சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் உணவை உட்கொள்ளலாம். இது முழுமையை ஊக்குவித்து, குறைந்த அளவு உணவு உட்கொள்ள வழிவகுக்கிறது.
வியர்வை வெளியேறும் நேரத்தில்
பெரும்பாலான நேரங்களில் வெப்பம், உடற்பயிற்சி செய்த பிறகு உள்ளிட்ட நேரங்களில் உடலில் திரவ இழப்பு ஏற்படுகிறது. அதிலும் உடற்பயிற்சி செய்யும் போது, தசைகள் சூடாகி, வெப்பத்தை வெளியேற்றும் வகையில் உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றுகிறது. எனவே இந்த சூழ்நிலையில், தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலைக் குளிர்விக்க வேண்டும்.
காலை எழுந்த பிறகு தண்ணீர் குடிப்பது
காலையில் எழுந்தவுடன் உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதற்கான சிறந்த நேரங்களில் ஒன்றாக தண்ணீர் குடிப்பது அடங்கும். இதில் உடல் நீண்ட உண்ணாவிரதத்தை கடந்துவரும் வேளையில், காலையில் எளிய தொடக்கத்திற்கு தண்ணீர் அருந்தலாம். அதிலும் எலுமிச்சை கலந்த நீரை குடிப்பது உடலில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றை அதிகரிக்கிறது.
தலைவலி வரும்போது
ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் முக்கிய காரணிகளில் ஒன்றாக நீரிழப்பு அமைகிறது. திரவ உட்கொள்ளலின் சிறிது குறைவு கூட கடுமையான தலைவலிக்கு வழிவகுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், மயக்கம் ஏற்படலாம். மேலும், சில சந்தர்ப்பங்களில் மருத்துவ சிகிச்சையும் தேவைப்படலாம். குறிப்பாக, ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவராக இருப்பின், எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது - ஏன் தெரியுமா?
நோய்வாய்ப்பட்டிருக்கும்போது
பொதுவாக, நோய்வாய்ப்பட்டிருக்கும்போது குணமடைய நீரேற்றம் முக்கியமாகும். வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் அதிகப்படியான நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே நோயின் முதல் அறிகுறியில், குறிப்பாக உங்களுக்கு பசி இல்லையெனில், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதே சமயம், காஃபின் மற்றும் மது கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் மேலும் நீரிழப்பை ஏற்படுத்தலாம்.
எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது?
அமெரிக்க தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அகாடமிகள், சராசரி ஆரோக்கியமான பெரியவர்களுக்கு அதிக திரவம் சிறந்த என்று கூறுகிறது. ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 15.5 கப் சிறந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில், பெரும்பாலான பெண்களுக்கு அனைத்து உணவு மற்றும் பானங்களிலிருந்தும் ஒரு நாளைக்கு 11.5 கப் போதுமானதாகும்.
ஆனால், இதில் உணவு மற்றும் அனைத்து பான மூலங்களிலிருந்தும் பெறப்படும் நீரேற்றம் அடங்குகிறது. இது நாம் செய்யும் பணிகள், சொந்த தேவைகள், உடல்நலம், எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் மற்றும் வசிக்கும் காலநிலை போன்றவற்றைப் பொறுத்தது ஆகும். தனிநபர்கள் அவரவர்களின் உடல்நலத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை மருத்துவரிடம் சரிபார்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நல்லதா? அப்படி குடித்தால் என்னவாகும்?
Image Source: Freepik