இவங்க மறந்தும் தேங்காய் தண்ணீரை குடிக்கக் கூடாது.. அப்படி குடிச்சா என்னாகும் தெரியுமா?

Who should not drink coconut water: தேங்காய் நீர் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும் சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் தேங்காய் நீரை அருந்துவது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இதில் தேங்காய் நீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதை யார் குடிக்கக் கூடாது என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இவங்க மறந்தும் தேங்காய் தண்ணீரை குடிக்கக் கூடாது.. அப்படி குடிச்சா என்னாகும் தெரியுமா?

Who should not consume coconut water: உடல் ஆரோக்கியத்திற்கு தேங்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, கோடைக்காலத்தில் இது மிகவும் அத்தியாவசிய தேவையாக அமைகிறது. மேலும் தேங்காய் தண்ணீரில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவையாகும். தேங்காய் நீர் அருந்துவது சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைக் குணப்படுத்தலாம்.

அதன் படி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமான பிரச்சனைகளை நீக்குவது என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தந்தாலும், சில உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு தேங்காய் நீரை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது நோயாளியின் தற்போதைய நிலையை மோசமாக்கலாம். இது குறித்து ஊட்டச்சத்து உணவியல் நிபுணர் ரக்ஷிதா மெஹ்ரா அவர்கள் தேங்காய் தண்ணீரை யார் குடிக்கக் கூடாது மற்றும் அதன் தீமைகள் என்ன என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அது பற்றி விரிவாகக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் நீரில் இந்த 4 பொருட்களை கலந்து குடித்தால் சத்துக்கள் இரட்டிப்பாகும்.!

தேங்காய் தண்ணீரை யார் குடிக்கக்கூடாது?

உயர் இரத்த சர்க்கரை

நீரிழிவு நோயாளிகள் தேங்காய் தண்ணீரை குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. உண்மையில், தேங்காய் நீரில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாக உள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட்டின் அளவும் அதிகமாகக் காணப்படுகிறது. இதை அருந்துவதால் இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கலாம். எனவே நீரிழிவு நோயாளியாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் அல்லது இரத்த அழுத்த மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தேங்காய் தண்ணீரை அருந்தக்கூடாது. உண்மையில், தேங்காய் நீரில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இந்நிலையில் இதை இரத்த அழுத்த மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதால், அது உடலில் உள்ள பொட்டாசியம் அளவை அதிகரிக்கலாம். இதன் காரணமாக, ஒரு நபர் பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே ஒருவர் ஏற்கனவே இரத்த அழுத்த பிரச்சினைகளைக் கொண்டிருந்தால், அவர்கள் தேங்காய் தண்ணீரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமைகள்

தேங்காய் நீர் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதாவது, தேங்காய் தண்ணீரை உட்கொண்ட பிறகு சருமத்தில் அரிப்பு, எரிதல் அல்லது சிவத்தல் போன்றவை ஏற்படலாம். இன்னும் சிலருக்கு தேங்காய் தண்ணீர் அருந்துவதால் உடலில் வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை கண்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்வது நல்லது. மருத்துவர் தடை விதித்தால், தவறுதலாக கூட தேங்காய் தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut and Diabetes: நீரிழிவு நோயாளிகள் தேங்காய் பால் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

சளி மற்றும் இருமல்

குளிர்காலத்தில் தேங்காய் தண்ணீரை குறைந்த அளவில் உட்கொள்வதே நல்லது. உண்மையில் தேங்காய் தண்ணீர் குளிர்ச்சி விளைவைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, இந்த நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், இதை அதிகளவு உட்கொள்வதால் சளி மற்றும் இருமல் பிரச்சனையை அதிகரிக்கலாம். எனவே, தேங்காய் தண்ணீரை அதிகளவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சளி, இருமல் கொண்டவர்கள் தேங்காய் நீரை அருந்தக் கூடாது.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள்

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் தேங்காய் தண்ணீர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் இதில் மிக அதிகளவிலான பொட்டாசியம் உள்ளது. எனவே இதை சிறுநீரகங்களால் எளிதாக வடிகட்ட முடியாது. இதனால் பொட்டாசியம் சிறுநீரகத்தில் சேரத் தொடங்கி, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

தேங்காய் நீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

தேங்காய் தண்ணீரை அதிகமாக உட்கொள்வதால் இந்த ஐந்து பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இது போன்ற ஏதேனும் பிரச்சனையை எதிர்கொள்பவராக இருப்பின், தேங்காய் தண்ணீரை உட்கொள்வதற்கு முன்பாக நிச்சயமாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water: இளைஞரின் உயிரை பறித்த இளநீர்... அளவுக்கு அதிகமா இளநீர் குடித்தால் என்னவாகும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

செரிமானம் முதல் நோயெதிர்ப்பு வரை.. பேஷன் ஃப்ரூட் தரும் ஆரோக்கிய நன்மைகள் இதோ

Disclaimer