Coconut Water: இளைஞரின் உயிரை பறித்த இளநீர்... அளவுக்கு அதிகமா இளநீர் குடித்தால் என்னவாகும் தெரியுமா?

Too much coconut water: நோயாளிகளுக்கும் பலவீனமானவர்களுக்கும் தேங்காய் தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்! ஆனால் அப்படிப்பட்ட தேங்காய் தண்ணீரைக் குடித்து ஒருவர் இறந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மையில் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
Coconut Water: இளைஞரின் உயிரை பறித்த இளநீர்... அளவுக்கு அதிகமா இளநீர் குடித்தால் என்னவாகும் தெரியுமா?

Is drinking too much coconut water unhealthy: வழக்கமாக கோடை காலம் வந்துவிட்டாலே நம் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வையாக ஆவியாகி வெளியேறிவிடும். இதனால், நமது உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த சந்தர்ப்பத்தில், நம் உடலை குளிர்விக்க அதிகமாக மோர், பானக்கம், ஜூஸ், இளநீர் மற்றும் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஏனெனில், இவை உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவது மட்டுமல்லாமல், நம் உடலில் உள்ள குறைந்த நீர்ச்சத்தையும் சமன் செய்கின்றன. இவை அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானவை என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒரு செய்து சமூக ஊடகங்களில் வெளியாகி நம்மை அச்சத்தில் ஆழ்தியுள்ளது. அதாவது, வெயில் காலம் என்றாலே தர்பூசணியையும், இளநீரையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட இளநீரை குடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம், ஆனால் நீங்கள் படித்த விஷயம் உண்மைதான்.

இந்த சம்பவம் டென்மார்க்கில் நிகழ்ந்துள்ளது. அந்த நபர் தேங்காய் தண்ணீரைக் குடிக்கும் நேரத்தில், அது துர்நாற்றம் வீசியதாகவும், உள்ளே அழுகியதாகவும் சுகாதார அறிக்கை கூறுகிறது. இதற்குக் காரணம் அவர் அருந்திய தேங்காய் நீர் சரியாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படவில்லை என்பது தான். வாருங்கள், இளநீர் எப்படி ஒருவரின் உயிரை பறித்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் நீரில் இந்த 4 பொருட்களை கலந்து குடித்தால் சத்துக்கள் இரட்டிப்பாகும்.!

அறிகுறிகள் எப்போது ஏற்படும்?

Coconut Water | Coconut Water Of Skin | Coconut Water Of Hair | HerZindagi

இவர் அழுகிய, நாற்றம் முடிக்கக்கூடிய தேங்காய் தண்ணீரைக் குடித்த சில மணி நேரங்களுக்குள், அவருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வியர்வை ஏற்படத் தொடங்கியது. பின், அவரால் நிதானமாக நடக்கக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவர் மூளை குழம்பிப் போயிருக்கிறது. அவரது உடலின் வடிவம் கூட மாறிவிட்டதாகத் அவருக்கு தோன்றியது. மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன், அவரது மூளை மெதுவாக உள்ளிருந்து வீங்கி வருவதைக் காட்டியது. அந்தக் காலத்தில் மருத்துவ உலகிற்கு இது ஒரு சவாலான வழக்காக இருந்ததில் ஆச்சரியமில்லை.

மூளை செயலிழப்பு

வளர்சிதை மாற்றப் பிரச்சினை காரணமாக மூளை செயலிழந்து வருவதாக மருத்துவர்கள் அறிந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26 மணி நேரத்திற்குப் பிறகும் அந்த மனிதனின் மூளை செயலிழந்து. அவரது உயிர்காக்கும் கருவிகள் அணைக்கப்பட்டன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு நான்கரை மணி நேரத்திற்கு முன்பு அந்த நபர் ஒரு ஸ்டரா வழியாக தேங்காய் தண்ணீரைக் குடித்திருந்தார். அழுகிய வாசனை வந்ததால், அவர் சிறிதளவு தேங்காய் தண்ணீரை மட்டுமே குடித்திருந்தார். பின்னர் அவர் தேங்காய்த் தண்ணீரைத் திறந்து தனது மனைவியிடம் காட்டினார். அது கெட்டுப்போயிருந்தது. இது ஒரு தொற்று நோய்கள் இதழில் வெளியான ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Drinks: வெயில் காலத்தில் எனர்ஜியா இருக்க இந்த பட்ஜெட் விலை பானம் குடிங்க!

அவர் செய்த தவறு என்ன?

Coconut Water Facial | Coconut Water For Skin| Coconut Water Toner |  HerZindagi

நாம் வீட்டிற்கு பார்சல் கொண்டு வரும்போது தேங்காய்த் தண்ணீரை உரித்து கொண்டு வருவது போல, அவரும் அதை முன்கூட்டியே உரித்து ஒரு ஸ்டராவுடன் வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார். எனக்கு தேங்காய் தண்ணீர் கொடுத்தவர், நான் அதை குடிக்கும் வரை நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கச் சொல்லியிருந்தார். ஆனால், அவர் அவர்களின் வார்த்தைகளைப் புறக்கணித்து ஒரு மாதத்திற்கு அதை சமையலறை மேசையில் வைத்திருந்தார் என்பதை அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இளநீரை முறையாக சேமிப்பது அவசியம்

திறந்த தேங்காய் நீரை உட்கொள்ளும் நாள் வரை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். ஏனெனில், இவற்றின் ஆயுட்காலம் மிகக் குறைவு. திறக்கப்படாத தேங்காய்களை அறை வெப்பநிலையில் பல மாதங்கள் சேமித்து வைக்கலாம் என்கிறார் டாக்டர் சாமுவேல் சௌத்ரி. இருப்பினும், இவ்வாறு பிழிந்த தேங்காய் நீரை காற்று புகாத கொள்கலன் அல்லது ஜிப்-லாக் பையில் வைத்து உடனடியாக குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இது மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை புதியதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: கருப்பு கவுனி அரிசி பற்றிய உண்மை தெரியுமா.? நன்மைகளோ ஏராளம்.! அப்படி என்ன இருக்கு இதுல.?

ஃப்ரீசரில் வைக்கவும்

உங்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டால், உலர்ந்த தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஃப்ரீசரில் சேமிக்கவும். சேமித்து வைப்பதற்கு முன் அதில் அதிக நீர்ச்சத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் தேதியை எழுதி சுமார் ஆறு மாதங்கள் சேமித்து வைக்கலாம். அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். தேங்காய் நீரில் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நோய்க்கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது.

Pic Courtesy: Freepik

Read Next

கல்லீரலில் இருந்து கொழுப்பை இயற்கையாகவே குறைக்க நீங்க குடிக்க வேண்டிய ட்ரிங்ஸ்

Disclaimer