$
People Who Should Not Drink Copper Water: பொதுவாக, ஆயுர்வேதத்தில் செம்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதன் காரணமாகவே, பல நூற்றாண்டுகளாக செம்பு பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீரை பலரும் அருந்தி வருகின்றனர். ஆயுர்வேதத்தின் படி, ஒரு செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரானது, உடலில் பித்தம் மற்றும் கபம் போன்றவற்றின் சமநிலையைப் பராமரிக்கவும், வயிற்று பிரச்சனைகளைப் போக்குவதாகவும் கூறப்படுகிறது.
ஏன் தாமிரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?
தாமிரம் என்பது ஒரு உலோகமாகும். இது உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. மேலும், தாமிரத்தின் உதவியுடன் நரம்பு செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது. இது கொலாஜன், எலும்புகள் மற்றும் திசுக்களை உருவாக்க உதவுகிறது. இது போன்ற ஏராளமான நன்மைகளை செம்பு பாத்திர தண்ணீர் தருவதாக இருந்தாலும், சிலர் சிலர் செம்பு பாத்திரங்களில் இருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது எனக் கூறுவர்.
இந்த பதிவும் உதவலாம்: Sweet After Dinner: இரவு உணவுக்குப் பின் ஸ்வீட் சாப்பிடுறீங்களா? முதல்ல இத கவனிங்க!
செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரைக் குடிப்பது ஒரு சிலருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. இது அவர்களுக்கு நன்மை அளிப்பதற்குப் பதிலாக, ன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இது தவிர, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது, செம்பு பாத்திரத்தில் யார் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இதற்கு முதலில் தாமிரம் நிறைந்த நீர் என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தாமிரம் சார்ஜ் செய்யப்பட்ட நீர்
செப்பு அல்லது தாமிரம் சார்ஜ் செய்யப்பட்ட நீர் என்பது ஒரு செப்பு பாத்திரம் அல்லது குடத்தில் நிரப்பப்பட்டு எட்டு மணி நேரம் வைக்கப்படுகிறது. மறுநாள் காலையில், இந்த தண்ணீரைக் குடிப்பதன் செயல்முறையானது ஒலிகோடைனமிக் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இதில் தாமிரத்தின் பண்புகளானது, தண்ணீரில் கலக்கப்படுகிறது. இதில் தாமிரம் தண்ணீரில் உள்ள பல வகையான பாக்டீரியாக்களை அகற்றி தண்ணீரை சுத்திகரிக்கிறது. எனினும், பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்ட செம்பு தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
செம்பு பாத்திர நீரைக் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்
அமிலத்தன்மை பிரச்சனை உடையவர்கள்
செப்பு பாத்திரம் ஒன்றில் பல மணி நேரம் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது எனக் கூறுவர். ஏனெனில், இது வெப்பத்தை அதிகரிக்கலாம். இவ்வாறு பல மணி நேரம் சேமித்து வைத்த தண்ணீரை அருந்துவது ஒரு நபருக்கு அமிலத்தன்மை பிரச்சினையைத் தூண்டலாம். இந்த சூழ்நிலையில், ஒருவர் ஏற்கனவே அமிலத்தன்மையால் தொந்தரவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் செப்பு பாத்திரத்தின் தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்து விட வேண்டும்.
செப்பு நச்சுத்தன்மை பிரச்சனை கொண்டவர்கள்
நாள் முழுவதும் ஒரு செப்பு பாட்டில் அல்லது பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதற்காக வைத்திருப்பது, அது உடலில் செப்பு நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். அதாவது உடலில் தாமிரத்தின் அளவு அதிகரிப்பது ஒரு நபருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தலாம். மேலும் இது கடுமையான குமட்டல், வயிற்று வலி, தலைச்சுற்றல் போன்றவற்றின் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Gold Chain Effects: தங்க நகை அணிவதால் கழுத்தில் அரிப்பு ஏற்படுமா? என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க
இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள்
செம்பு தண்ணீரை உட்கொள்வது அனைத்து இதய நோயாளிகளுக்கும் நல்லதல்ல என்று கூறப்படுகிறது. ஏனெனில், மூச்சுத் திணறல் உள்ளவர்கள், சிறிது தூரம் நடந்த பிறகு மூச்சுத் திணறத் தொடங்கும் நோயாளிகள் போன்றோர் செம்பு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கட்டாயம் செப்பு பாத்திர தண்ணீரைக் குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

வில்சன் நோய்
உடலில் அதிகளவிலான தாமிரம் இருப்பது, அவர்களுக்கு வில்சன் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், கண்கள், கல்லீரல், மூளை மற்றும் உடலின் பல பாகங்களில் தாமிரம் குவியலாம். இந்த சூழ்நிலையில், செப்பு பாத்திரங்களைப் பயன்படுத்துவது நிலையை மீண்டும் மோசமாக்கலாம்.
சிறுநீரக நோயாளிகள்
அதிகளவிலான தாமிர நீரை அருந்துவது சிறுநீரக நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதிலும் கால்கள் வீங்கிய அல்லது டயாலிசிஸில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.
செம்பு தண்ணீரைக் குடிக்க சரியான நேரம் எது?
பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை அருந்துவது சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. மேலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை செப்பு பாட்டிலில் சேமித்து வைத்த தண்ணீரை அருந்துவது உடலுக்கு தேவையான அளவு தாமிரத்தை வழங்க போதுமானதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Copper Water: செப்பு பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
Image Source: Freepik