
$
Is The Gold Chain Around Your Neck Causing Itchy Neck: தங்கம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்காது. தங்க அணிகலன்களை அணிவது என்பது பெரும்பாலானோர்க்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பொதுவாக அணிகலன்கள் அணிவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை தருவதாக அமைகிறது. எனினும், ஆடை அணிகலன்களை அணிவது சில சமயங்களில் சருமத்திற்கு நன்மை பயக்கும். சில சமயங்களில் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். இதில் தங்க நகைகள் அணிவதால் மென்மையான சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம்.
முக்கியமான குறிப்புகள்:-
பெரும்பாலும் பெண்கள் கழுத்தில், காதில் அணியும் ஆபரணங்களே அதிகளவு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் பலருக்கும் கவரிங் நகையால் அலர்ஜியை எதிர்கொள்வர். மேலும் சொறி பிரச்சினையும், சருமத்தில் தழும்புகள், திட்டுகள், சிவப்பு நிறத்தில் கட்டிகள் போன்றவையும் ஏற்படலாம். இதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் தெரியாது. இதன் காரணமாக அணிகலன்கள் அணிவதால் ஏற்படும் இந்த சரும பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் தங்க அணிகலன்களை அணிவதை அசௌகரியமாக நினைத்துக் கொள்வர். தங்க நகைகளால் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sweet After Dinner: இரவு உணவுக்குப் பின் ஸ்வீட் சாப்பிடுறீங்களா? முதல்ல இத கவனிங்க!
தங்க நகையால் அலர்ஜி
கவரிங் நகை மட்டுமல்லாமல், தங்க நகைகள் சில பெண்களுக்கு அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தலாம். இதற்கு அணியும் ஆபரணங்களில் வெள்ளி போல் வெண்மை நிறம் கொண்ட கனிமமான நிக்கல் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். அணிகலன்களால் அலர்ஜி ஏற்படுவது எந்த வயதிலும், எந்த பருவ காலங்களிலும் ஏற்படலாம். எனினும், இரு அவரவர்களின் சருமத்தின் தன்மையையும், உடல் தன்மையையும் பொறுத்து அமைகிறது. அதாவது மனித உடலில் நிக்கல் உலோகத்தின் வெப்பநிலையை ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து மாறுபடுகிறது. எனவே அலர்ஜி வந்துவிட்டால் நகைகள் அணிவதை தவிர்ப்பதே நல்லது. இதன் காரணமாக, தொடக்கத்தில் வரும் சிறிய அளவிலான அலர்ஜியும், நாளடைவில் பெரிய பிரச்சனைக்கு உள்ளாகிறது.
குறிப்பாக, ஒரு முறை அலர்ஜி ஏற்பட்டால் அது குணமாக அதிக ஆண்டுகள் வரை நீடிக்கலாம். சில சமயங்களில் வாழ்நாள் முழுக்க இந்த அலர்ஜி தொடர்ந்து கொண்டே இருக்கும். அதே சமயம், சொக்கத் தங்கத்தில் அணிகலன்கள் செய்ய முடியாது. எனவே தங்க நகை செய்வதற்கு செம்பு, நிக்கல், துத்தநாகம், கோபால்ட், குரோமியம் போன்றவற்றைச் சேர்த்து நகைகள் தயாரிக்கப்படுகின்றனர். மேலும், இதில் துத்தநாகம், செம்பு போன்றவை எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது.
நிக்கல் அதிகம் கலந்திருக்கும் அணிகலன்களிலோ, அதன் கோட்டிங் சரியில்லாத போதோ அந்த நகையால் அலர்ஜி ஏற்படலாம். இதற்கு மற்றொரு காரணமாக வியர்வை உண்டாவதாகும். அதிலும் குறிப்பாக, கோடைக்காலத்தில் அதிக நேரம் நகைகள் அணிவதால் வியர்வை உண்டாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். இந்த வியர்வையானது யில் கலக்கப்பட்டுள்ள உலோகங்களுடன் சேரும்போது நிக்கல் உப்பு வடிவில் வெளியாகலாம். இந்த உப்பு வெளிப்பாடு காரணமாக சருமத்தில் அலர்ஜி ஏற்படத் தொடங்கலாம். பெரும்பாலும் இந்த அலர்ஜியால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcers: அதிகமாக மாத்திரை சாப்பிட்டால் வாய் புண் வருமா? டாக்டர் கூறுவது இங்கே!
பேட்ச் சோதனை
Webmd-ல் குறிப்பிட்டுள்ள படி, “சருமத்தை நிக்கலுடன் தொடர்பு கொள்வதால் பொதுவான ஒவ்வாமை எதிர்வினை உண்டாகும். இதனால் அரிப்பு சொறி ஏற்படுகிறது. இதில் புண்கள் அடிக்கடி தோன்றலாம். இது பொதுவாக லேசானதாக இருந்தாலும், அவற்றின் அறிகுறிகள் நீண்டகால வெளிப்பாட்டால் பலவீனமடையலாம். குறிப்பாக நிக்கல் காண்டாக்ட் டெர்மடிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அது மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிக்கலுடன் தொடர்பைத் தவிர்க்க கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.
இதில் தோல் மருத்துவர் தோல் பேட்ச் சோதனையை செய்வர். இவற்றை சிறிய அளவிலான நிக்கல் மற்றும் பிற ஒவ்வாமைகளை சருமத்தில் வைத்து, அவற்றைத் திட்டுகளால் மூட வேண்டும். இந்த இணைப்புகள் 48 மணி நேரம் இருக்க வேண்டும். இந்த சோதனையில் நிக்கலுக்கு ஒவ்வாமை இருப்பின், அந்த நேரத்திற்குப் பின் தோல் எதிர்வினைகள் தோன்றும். இதில் சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சோதனைகள் தேவைப்படுகிறது.
நிக்கல் ஒவ்வாமைக்கு என்ன செய்யலாம்?
Webmd-யில் குறிப்பிட்ட படி, ஒரு முறை நிக்கல் ஒவ்வாமை ஏற்பட்டால், அது வாழ்நால் முழுவதும் நீடிக்கலாம். இந்த அறிகுறிகளை எளிதாக்க உதவும் வழிகள் சில உள்ளன.
- முதலில் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். இதன் லேசான அறிகுறிகளுக்கு ஆண்டிஹிஸ்டமைன்கள் உதவக்கூடும்.
- மிகவும் கடுமையான அறிகுறிகளுக்கு மருத்துவர் ஒரு ஸ்டீராய்டு கிரீம் அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தில் செயல்படும் மருந்துகளை பரிந்துரைக்கலாம். மேலும் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருப்பின், சிகிச்சையில் வாய்வழியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஸ்டீராய்டுகள் மற்றும் ஆண்டிஹிஸ்டமைன் மாத்திரைகள் போன்றவை அடங்கும்.
- மேலும், சருமத்தில் வெடிப்புகள் அல்லது கொப்புளங்கள் இருப்பின், உடனடியாக உலோக நகைகளைக் கழற்றி, தொற்று ஏற்படாமல் இருக்க உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
நிக்கல் ஒவ்வாமை பிரச்சனைகளைக் கொண்டவர்கள், நிக்கலுக்கு மிகவும் உணர்திறன் உடையவராக இருப்பின், அவர்கள் நிக்கலைத் தவிர்க்க வேண்டிய முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Alarm Side Effects: நிறைய அலாரம் வைக்கிறீர்களா.? எச்சரிக்கை.! நிலைமை மோசமாகலாம்..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version