$
Who Should Avoid Coffee Before Workout: காலை எழும் போதே பெரும்பாலானோர் காபி, டீ அல்லது பால் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டிருப்பர். காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கான ஆற்றலைத் தருவதாக பலரும் கருதுகின்றனர். இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்திற்கு கருப்பு காபியின் நன்மைகளைப் பற்றிப் புரிந்து, கருப்பு காபியைக் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். இதில் சிலர் உடற்பயிற்சிக்கு முன்னதாக காபி குடிக்கும் வழக்கத்தை வைத்திருப்பர்.
இன்று பலரும் உடல் எடையைக் குறைக்கவும், மிகவும் ஆரோக்கியமாக இருக்கவும் பல்வேறு ஆரோக்கியமான தேர்வுகளைத் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் கருப்பு காபி அவர்களுக்கு ஒரு பிரபலமான உடற்பயிற்சி சப்ளிமெண்ட் ஆகக் கருதப்படுகிறது. உண்மையில் காஃபின் காபி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவ்வாறே, கொழுப்பு மற்றும் கலோரிகளை சிறப்பாக எரிப்பதில் கருப்பு காபி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் காபியில் உள்ள காஃபின் தசை வலியைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், உடல் எடையை குறைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Black Coffee Benefits: பிளாக் காபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
யார் குடிக்கக் கூடாது?
இவ்வாறு கருப்பு காபி வொர்க் அவுட்டிற்குத் தேவையான பல நன்மைகள் இருந்தாலும், அதை அனைவரும் உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், சில பிரச்சனைகளைக் கொண்டவர்கள் காபி உட்கொள்வது அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், மன ஆரோக்கியத்திற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. இந்நிலையில் வொர்க் அவுட்டிற்கு முன்னதாக யாரெல்லாம் கருப்பு காபி குடிக்கக் கூடாது என்பது குறித்து காண்போம். மேலும், இவ்வாறு பிளேக் காபி குடிப்பதால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் காணலாம்.

உடற்பயிற்சிக்கு முன் யாரெல்லாம் காபி குடிக்கக் கூடாது?
இதயம் சார்ந்த பிரச்சனைகள்
ஒருவர் இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சிக்கு முந்தைய வழக்கத்திலிருந்து கருப்பு காபி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் காபி அருந்துவதால் அதில் நிறைந்திருக்கும் காஃபின் ஆனது இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு போன்றவற்றில் தற்காலிக அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த காரணத்திற்காகவே இரத்த அழுத்தம் அல்லது இதய நோயாளிகள் போன்றோர் உடற்பயிற்சியின் போது கருப்பு காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த இதயத் துடிப்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Coffee: காபியிலும், காபித் தூளிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை உள்ளவர்கள்
ஒருவர் முன்னதாகவே ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையைக் கொண்டிருந்தால், அவர்கள் வொர்க்அவுட்டுக்கு முன்னதாக பிளாக் காபி குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில், கருப்பு காபி ஆனது உணவுக்குழாய் சுழற்சியை தளர்த்துகிறது. இந்த உணவுக்குழாய் தளர்ச்சி அமில ரிஃப்ளக்ஸ்க்கான பொதுவான காரணமாக அமைகிறது. இந்நிலையில் காபியில் உள்ள காஃபின் வயிற்றைத் தூண்டி அதிக அமிலத்தை உற்பத்தி செய்கிறது. எனவே ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் உடற்பயிற்சிக்கு முன்னதாக கருப்பு காபியைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இது அவர்களுக்கு நெஞ்செரிச்சல், அமைதியின்மை மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
தூக்கமின்மையை சந்திப்பவர்கள்
தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் பயிற்சிக்கு முன்னதாக கருப்பு காபி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காஃபின் உட்கொள்ளல் தூக்க முறைகளை சீர்குலைத்து, நன்றாகத் தூங்குவதைத் தவிர்க்கிறது. இவ்வாறு நல்ல தூக்கம் இல்லாதது, ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கும் நபர்கள் உடற்பயிற்சிக்கு முன்னதாக காபி உட்கொள்ளலைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சிக்கு முன்னதாக பிளாக் காபி உட்கொள்வதைக் கட்டாயம் தவிர்ப்பது அவசியமாகும். மேலும் நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Quitting Coffee Benefits: காபி குடிப்பதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version