ஜிம்மிற்கு செல்லும் முன் மறந்தும் இதை சாப்பிடாதீர்கள்.!

  • SHARE
  • FOLLOW
ஜிம்மிற்கு செல்லும் முன் மறந்தும் இதை சாப்பிடாதீர்கள்.!

ஜிம்மிற்கு செல்லும் முன் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். ஜிம்மிற்கு செல்லும் முன் சில உணவுகளை சாப்பிடக்கூடாது. அது என்ன உணவுகள் என்பதை இங்கே காண்போம். 

அதிக கொழுப்பு

ஜிம்மிற்குச் செல்லும் முன் அதிக கொழுப்புள்ள வறுத்த உணவுகள், பீட்சா, பர்கர்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் எண்ணெயில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிட வேண்டாம். இவற்றை சாப்பிடுவதால் உடல் விரைவில் சோர்வடையும் என்பது ஐதீகம். மேலும், இவை ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பை ஏற்படுத்துகின்றன. அதாவது ஜிம்மில் நீங்கள் உழைக்கும் உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும்.

சர்க்கரை உள்ளடக்கம் 

ஜிம்மில் பயிற்சிக்கு முன் சாக்லேட், கேக், பிஸ்கட், இனிப்புகள், குளிர்பானங்கள், அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்ளக் கூடாது. இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அப்போது அதிக அளவு இன்சுலின் வெளியாகும். இதனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென மயங்கி விழும் அபாயம் உள்ளது. 

இதையும் படிங்க: Best Pre-Workout Foods: உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை சாப்பிட்டால் டபுள் ரிசல்ட் உறுதி!

அதிக நார்ச்சத்து

நாம் ஆரோக்கியமாக இருக்க நார்ச்சத்து உணவு மிகவும் அவசியம். ஆனால், ஜிம்மிற்குச் செல்வதற்கு முன், ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள், காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் ஒர்க் அவுட் செய்வதில் சிரமம் ஏற்படும்.

காரமான உணவுகள்

ஜிம்மில் வொர்க்அவுட்டுக்கு முன், காரமான உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை, அஜீரணம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். 

பால் பொருட்கள்

ஜிம்மிற்கு செல்லும் முன் பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் சிலர் இவற்றை உட்கொள்வதால் விரைவில் சோர்வடைவார்கள். இவை ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

Read Next

உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்